28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
22 63426b3f2aec4
அழகு குறிப்புகள்

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா ஒருமணி நேரத்தில் முடிந்துவிடும்

பிரித்தானிய மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவானது ஒருமணி நேரத்திற்குள் முடிவுக்கு வந்துவிடும் என ராஜகுடும்ப வட்டாரத்தில் கூறப்படுகிறது.

வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்படும் முடிசூட்டும் விழாவானது குறைவான சடங்குகளுடன் முடிவுக்கு வரும் எனவும், ராணியாருக்கு முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சடங்குகள் எதுவும் இருக்காது என்றே தெரிய வந்துள்ளது.

 

பொதுவாக நான்கு மணி நேரம் வரையில் சடங்குகள் நீடிக்கும் என்ற நிலையில், தற்போது ஒருமணி நேரத்திற்குள் முடிவுக்கு வரும் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, சிறப்பு விருந்தினர்கள் எண்ணிக்கையும் 8,000ல் இருந்து 2,000 என குறைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ராஜகுடும்ப விழாவுக்கான பாரம்பரிய உடைகளுக்கு பதிலாக விருந்தினர்களுக்கு ஏற்ற உடைகளை அனுமதிக்க உள்ளனர். மொத்த விழாவும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் தலைமையில், அல்லது முக்கிய பொறுப்பில் அவர் உட்படுத்தப்படுவார் என்றே கூறப்படுகிறது.

 

கடந்த 70 ஆண்டுகளில் உலகம் மிகவும் மாறிவிட்டது எனவும், அதற்கு ஏற்றபோல் முடிசூட்டு விழாவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என மன்னர் சார்லஸ் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ராணியாரின் முடிசூட்டு விழாவின் போது சுமார் 8,000 விருந்தினர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வெஸ்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட விழாவில் ஒரு நொடி கூட நகராமல் பொறுமையாக கலந்துகொண்டனர். ஆனால் தற்போது 2,000 விருந்தினர்கள் மட்டுமே மன்னர் சார்லஸ் முடிசூட்டும் விழாவில் அழைக்கப்பட உள்ளனர்.

-lankasri

Related posts

சிவந்த நிறத்தில் ஜொலிக்க.

nathan

கறுப்பு சருமம் தான் ஆரோக்கியமானதா

nathan

அல்சர் நோயினால் அவதிப்படுகிறீர்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

அரங்கேறிய துயரம்! அண்ணனை நம்பி தோழியை அழைத்துச் சென்ற தங்கை!

nathan

சூப்பரான முட்டை பிரை

nathan

கணவருடன் சொகுசு வாழ்க்கை!சிக்கிய டிக் டாக் தம்பதி!

nathan

பித்த வெடிப்பை உடனே போக்குவதற்கான சிறந்த வழிமுறைகள்!

nathan

இதை நீங்களே பாருங்க.! பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் மனைவி, மகனுடன் பிறந்தநாள் கொண்டாடிய கதிர்-

nathan

காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இதை செய்யங்கள்.. இத்தனை நன்மைகளாம்…

sangika