28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
ubtan face pack 1651132250
முகப் பராமரிப்பு

வாரத்துக்கு 2 முறை உப்தான் ஃபேஸ் பேக் போடுவதால் பெறும் நன்மைகள்

அழகாக இருக்க, அழகை அதிகரிக்க பலவிதமான அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு பலர் சருமத்தைப் பராமரித்து வருகின்றனர். அதற்கேற்ப, பல வகையான தோல் பராமரிப்புப் பொருட்களையும் கடையில் விற்பனை செய்கிறது. இருப்பினும், ரசாயனங்கள் கொண்ட பொருட்கள் அனைவருக்கும் நல்லது என்று சொல்ல முடியாது. இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினால், நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள்.

சருமத்தின் அழகை மேம்படுத்தும் அப்டான் ஃபேஸ் பேக்குகள் இப்போதெல்லாம் மிகவும் பிரபலமாக உள்ளன. அப்டுன் ஃபேஸ் பேக்குகள் பாரம்பரிய அழகு சாதனப் பொருட்களால் செய்யப்பட்ட ஃபேஸ் பேக்குகள். இந்த வகை ஃபேஸ் பேக்கை பல பெண்கள் திருமணம் மற்றும் விழாக்களில் தங்கள் முகத்தின் பொலிவை அதிகரிக்க பயன்படுத்துகின்றனர்.இந்த அப்டன் ஃபேஸ் பேக்கை வீட்டிலேயே செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?அப்ளை செய்வதன் நன்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமா?பின் இந்தக் கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

 

உப்தான் ஃபேஸ் பேக் தயாரிக்கும் முறை:
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சந்தன பவுடர், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் பால் மற்றும் 2 டீஸ்பூன் கடலை மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை நன்கு கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

கரும்புள்ளியை நீக்கி உங்க சருமத்தை பளபளப்பாக ஒளிரச் செய்ய கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க போதும்!கரும்புள்ளியை நீக்கி உங்க சருமத்தை பளபளப்பாக ஒளிரச் செய்ய கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க போதும்!

உப்தான் ஃபேஸ் பேக்கின் நன்மைகள்:

முற்றிலும் இயற்கையானது

உப்தான் ஃபேஸ் பேக் கெமிக்கல் இல்லாதது. ஆகவே இதில் எவ்வித பக்கவிளைவும் இருக்காது. அதோடு இதை தினமும் பயன்படுத்தினாலும் சருமத்தில் எவ்வித ஆபத்தும் ஏற்படாது. முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கில் உள்ள பொருட்கள் சருமத்தின் ஆழம் வரை ஊடுருவி வேலை செய்யக்கூடியது. எனவே இந்த ஃபேஸ் பேக்கை போட்டால் சருமம் பளிச்சென்று ஜொலிக்கும்.

தினமும் நீங்க ‘இத’ குடிச்சாலே போதுமாம்… உங்க சருமம் பளபளன்னு மின்னுமாம் தெரியுமா? தினமும் நீங்க ‘இத’ குடிச்சாலே போதுமாம்… உங்க சருமம் பளபளன்னு மின்னுமாம் தெரியுமா?

கருமையைப் போக்கும்

இன்று பெரும்பாலானோரது முகத்தின் நிறம் மட்டும் வேறுபட்டு காணப்படும். இதை மறைப்பதற்கு பல பெண்கள் மேக்கப் போடுகிறார்கள். ஆனவே உப்தான் ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்கும். அதுவும் தினமும் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதால், முகத்திற்கு மேக்கப் போட வேண்டிய அவசியமே இருக்காது. அந்த அளவில் முகம் அழகாக காணப்படும்.

தங்கம் மாதிரி நீங்க ஜொலிக்க இந்த முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்குகளை யூஸ் பண்ணா போதுமாம் தெரியுமா? தங்கம் மாதிரி நீங்க ஜொலிக்க இந்த முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்குகளை யூஸ் பண்ணா போதுமாம் தெரியுமா?

சுத்தமான சருமம்

உப்தான் ஃபேஸ் பேக் சருமத்தை சுத்தம் செய்யும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். சருமத்தில் புதிய மற்றும் ஆரோக்கியமான செல்களின் உற்பத்தியை தூண்டும். முக்கியமாக சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கும்.

மென்மையான சருமம்

சுட்டெரிக்கும் வெயிலால் சருமம் எளிதில் வறட்சியடையும். எனவே கோடைக்காலத்தில் அதிகளவு நீரைக் குடிப்பதைத் தவிர, சருமத்திற்கு குளிர்ச்சி அளிக்கும் வகையில் ஒருசில செயல்களை மேற்கொள்ள வேண்டும். அதுவும் உப்தான் ஃபேஸ் பேக்கை போட்டால், சருமம் குளிர்ச்சி அடைவதோடு, கோடையில் சருமம் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, சருமம் மென்மையாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது

உப்தான் ஃபேஸ் பேக் வறண்ட அல்லது எண்ணெய் பசை என அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. இந்த ஃபேஸ் பேக்கில் பச்சை பால், தண்ணீர் அல்லது தேன் என எதை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தினாலே போதும், நல்ல பலன் கிடைக்கும்.

Related posts

மூன்றே நாட்களில் கருப்பான முகத்தை வெள்ளையாக்க சில வழிகள்!

nathan

நம்முடைய மூக்கை சிறியதாகவும் கூர்மையாகவும் மாற்றிக் கொள்ள முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

sangika

உங்க அழகை கெடுக்கும் இந்த கரும்புள்ளிகளை போக்குவது எப்படி? இதை முயன்று பாருங்கள்!

nathan

நீங்கள் வெள்ளையாவதற்கு இரவில் படுக்கும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!இதை படிங்க…

nathan

முகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளைப் போக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க..

nathan

தேவையற்ற முடிகளை நீக்கும் மஞ்சள் பேஸ் பேக்

nathan

தேஜஸான முகம் பெற என்ன செய்ய வேண்டும்?

nathan

கோடை வெயிலால் ஏற்படும் சரும எரிச்சலைத் தடுக்க ஃபுரூட் ஃபேஸ் பேக் போடுங்க…

nathan

தக்காளி மாதிரி தகதகனு மின்னணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் மாஸ்க்குகளை யூஸ் பண்ணுங்க!

nathan