27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
13 1452663652 7 honey
சரும பராமரிப்பு

ஐந்தே நாட்களில் பொலிவான சருமத்தைப் பெற தேன் ஃபேஸ் பேக் போடுங்க

பழங்காலம் முதலாக தேன் பல்வேறு சரும பராமரிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது கடைகளில் விற்கப்படும் ஏராளமான அழகு சாதனப் பொருட்களிலும் தேன் முக்கிய மூலப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தேனை நேரடியாக சரும பராமரிப்புகளுக்குப் பயன்படுத்தினால் எவ்வளவு நன்மை கிடைக்கும்? அதிலும் தேனைக் கொண்டு அடிக்கடி சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், நாம் சந்திக்கும் சரும பிரச்சனைகளான சுருக்கங்கள்,
முதுமைக் கோடுகள், முகப்பரு, கரும்புள்ளிகள், சரும வறட்சி போன்றவற்றைத் தடுக்கலாம். அதிலும் பண்டிகைக் காலங்களில் ஒவ்வொருவரும் பொலிவான தோற்றத்தில் காணப்பட பலரும் ஆசைப்படுவோம். உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால்,
தேனைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட ஆரம்பியுங்கள். சரி, இப்போது தேனைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போம்.

தேன் மற்றும் எலுமிச்சை மசாஜ் 1 டீஸ்பூன் தேனில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால், சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் மின்னும்.

எண்ணெய் பசை சருமத்தினருக்கு தேன் மற்றும் தயிர் இந்த ஃபேஸ் மாஸ்க் முகப்பரு, எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு சிறந்தது. அதற்கு 1 டேபிள் ஸ்பூன் தேனை 1 டேபிள் ஸ்பூன் தயிருடன் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

தேன் மற்றும் வாழைப்பழம் பிரகாசமான சருமத்தைப் பெற நினைத்தால், 1 டேபிள் ஸ்பூன் தேனில் சிறிது நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து சேர்த்து, 20 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை 5 நாட்கள் தொடர்ந்து செய்து வர, நல்ல மாற்றம் தெரியும்.

தேன், ரோஸ் வாட்டர் மற்றும் மஞ்சள் 1 டேபிள் ஸ்பூன் தேனுடன், சிறிது ரோஸ் வாட்டர் மற்றும் 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ, அதில் உள்ள மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் மற்றும் தேன் மூலம் சருமத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
13 1452663652 7 honey

Related posts

ஆலிவ் ஆயிலை இவ்வாறு முகத்தில் அப்ளை பண்ணுங்கள்… அதிக பலன் கிடைக்கும்…

sangika

இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க இத செய்யுங்கள்!…

sangika

அலட்சியம் வேண்டாம் குளிக்கும் முன் நினைவில் வைக்கவேண்டியவை!!

nathan

அழகு உங்கள் கையில்

nathan

சருமமே சகலமும்…!

nathan

முதுமையை விரட்டி இளமையை நிலை நாட்ட உங்களுக்கான தீர்வு!…

sangika

உங்களுக்கு தெரியுமா அழகுக்காக இப்படியெல்லாமா செய்வார்கள்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வறண்டு இருக்கும் சருமத்தை சரிசெய்வதற்கான சில வழிகள்!

nathan

அழகு குறிப்புகள்:அழகு தரும் பூ…

nathan