34.1 C
Chennai
Monday, Jul 28, 2025
128476 pimplesss
முகப்பரு

முகப்பரு வடு நீக்க வெந்தயமே சிறந்தது.

வயிறு எரிச்சல் மற்றும் உடல் சூட்டை தணிக்கும், அரிய வகை மருந்தாக வெந்தயம் பயன்படுகிறது. முகப்பருவை போக்கவும், கருமையான கூந்தலை பெறவும் பயன்படுகிறது. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நன்றாக வளரும். பொடுகு தொல்லையும் இருக்காது.

முகத்தில் உள்ள பருக்கள் மறைந்தாலும், அதன் தழும்புகள் இருந்த இடத்தில் உள்ள வடுக்கள் பலருக்கு மாறாமல் இருக்கும். இத்தழும்புகள், நம் அழகான தோற்றத்தை கெடுத்துவிடும். இதை போக்க, சிறந்த மருந்தாக வெந்தயம் பயன்படுகிறது. வெந்தயம் முகப்பரு தழும்பை மட்டும் நீக்குவதில்லை; முகத்தின் தோற்றத்தையும் பொலிவுடையதாக மாற்றும் சக்தி உடையது.

எலுமிச்சை சாற்றில் பஞ்சை நனைத்து, அதை முகப்பருக்கள் மீது தடவினால் மென்மையாக மாறும். எலுமிச்சை சாற்றின் சக்தியால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும். ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து, முகத்தில் தடவினால், பருக்கள் உதிர்ந்து தழும்புகள் மறையும். திரும்ப பருக்கள் வருவதை தடுக்கும். வென்னீரில் வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து அரைத்து, குளிர்ந்த பின், தழும்பு உள்ள இடத்தில் தடவி, 20 30 நிமிடம் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகும்.

வெந்தயத்தை ஊற வைத்து விழுது போல் அரைத்து, முகத்தில் தடவி மாஸ்க் போல் பயன்படுத்தலாம். தழும்புகளின் மீது தடவி, அவற்றை நீக்கினால் நல்ல பலன் கிடைக்கும். பன்னீருடன் சந்தனத்தை கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி, அதை முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளவும். ஒரு மணிநேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பருக்கள் நீங்கி, முகம் அழகாக மென்மையாக இருக்கும். இயற்கையான இந்த வைத்திய முறையால், வேறு எந்த பக்க விளையும் ஏற்படாது.128476 pimplesss

Related posts

முகப்பருக்களை தடுக்க எப்படி யூக்கலிப்டஸ் பயன்படுத்தலாம்? முயன்று பாருங்கள்!!

nathan

எவ்வாறு முழுமையாக இயற்கை முறையில் ஹார்மோன்களின் மாற்றங்களினால் உண்டாகும் முகப்பருக்களை போக்கலாம்….

sangika

முகப் பரு, கரும் புள்ளிகள் குறைந்து பொலிவுடன் காண அரிசி ஃபேஸ் பெக்!…

sangika

பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறைய -சூப்பர் டிப்ஸ்

nathan

வீட்டிலிருந்த பொருட்களை வைத்தே கருமையான திட்டுகளை சரி செய்து விடலாம்…..

sangika

முகத்தில் பருக்கள் வரக்காரணமும் – தீர்வும்

nathan

ஒரே இரவில் பிம்பிளைப் போக்க வேண்டுமா? அப்ப இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க…

nathan

பருக்கள் வராமல் இருக்க ஆயுர்வேதம் சொல்லும் முக்கிய குறிப்புகள்!!!

nathan

மார்பு மருக்களால் அவதியுறுகிறீர்களா? இதோ வீட்டு வைத்தியம்!

nathan