31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சரும பராமரிப்பு

சுருக்கம் இல்லாத சருமம் வேண்டுமா ?

பெரும்பாலான டீன்-ஏஜ் பெண்கள் தற்போது “பாஸ்ட் புட்” வகை உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள். இதனால் அவர்களது முகம் இளவயதிலேயே வயதானவர் போல சுருக்கம் விழுந்து அழகை இழந்து தவிக்கிறார்கள். இப்படி வரும் இளமையில் முதுமையை தவிர்க்க இதோ சில டிப்ஸ்,

அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறி-பழங்களைத் தவறாமல் சாப்பிட்டு விடுங்கள். இயற்கையான காய்கறி, பழங்களில் இருக்கும் விட்டமின்களும், சத்துக்களும் தோளில் சுருக்கம் வருவதற்கே அனுமதி கொடுக்காது. வாரம் ஒன்று அல்லது 2 முறை ஆரஞ்சு ஜூஸோ (Orange Juice) , கேரட் ஜூஸோ (Carrot Juice) குடித்து வந்தால் சருமம், ஈரப்பதத்துடன் பளபளப்பாக இருக்கும்.

ஆறு சுவைகளில் துவர்ப்புச் சுவை தான் பெண்களின இளமைக்கு பாதுகாப்பானதாக உள்ளது. வாழைப்பூ, வாழைத் தண்டு, பெரிய நெல்லிக்காய் (Amla) போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, இளமையின் ஆயுள் அதிகரிக்கும்.

வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு சிரகத்துடன் வேகவைத்து மசித்து சாப்பிட்டு வாருங்கள். வாரம் 2 அல்லது 3 முறை இப்படி சாப்பிட்டு வர உடல் குளுமையாக இருக்கும். அதோடு இந்த ரெசிபி ஜீரண சக்தியைத் தூண்டி விட்டு, கழிவுகளை சுத்தமாக வெளியேற்றி விடும். இன்னொரு முக்கியமான விஷயம், வெந்தயக் கீரை நமது சருமத்தில் சுருக்கம் விழாதபடி எப்போதும் ஈரப்பசையுடன் வைக்கும். எனவே தோல் சுருக்கத்தை விரட்ட வெந்தயக் கீரையை தாராளமா சாப்பிடுங்க.

மசாஜ்: நல்லெண்ணை, பாதாம் எண்ணை இரண்டையும் சமமாக எடுத்து உடல் முழுவதும் தடவி, 3 மணி நேரம் ஊறவையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முகச் சுருக்கமா அது எங்கே என்பீர்கள்.

கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் “ஏ” இளமையான சருமத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது

Related posts

மழைக்காலத்தில் உடல் பராமரிப்பு

nathan

முதல் முறையாக பார்லர் போகும் போது..

nathan

மூன்றே மாதத்தில் சரும கருமையை போக்கும் ஃபேஸ் பேக்

nathan

கை, கால், முகத்தில் இருக்கும் முடியை நீக்குவதற்கு!…

sangika

உங்களுக்கு தெரியுமா கோடையில் உடல் வறட்சியடையாமல் தடுப்பது எப்படி?

nathan

உங்கள் காலிலோ கையிலோ அல்லது முகத்திலோ அடிப்பட்ட தழும்பு ஆழமாக வெள்ளையாக தடிமனாக இருக்கிறதா?

sangika

அழகு குறிப்புகள்:மேனியை மெருகூட்ட!

nathan

கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய டிப்ஸ்

nathan

குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan