27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
banana
சரும பராமரிப்பு

இறந்த செல்கள் அனைத்தையும் நீக்கி பொலிவு பெற உதவும் வாழைப்பழம்…

சரும அழகை பேணி காக்க, முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கினாலே கருமை நீங்கி முகம் ஜொலிக்க துவங்கும்.

வெளியிடங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது காற்றில் பரவும் தூசுகளும், மாசுகளும் முகத்தில் படிந்து முகத்தில் அலர்ஜியை உண்டாக்கி விடுகின்றது. இதனால் முகப்பருக்களும், கரும்புள்ளிகளும் ஏற்பட்டு முக அழகை சீர்குலைக்கிறது.

தினமும் வாழைப்பழத்தை சாப்பிடுபவர்களுக்கு உடலில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி உடல் தூய்மை அடையும்.

ஒரு வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்கு தண்ணீர் விடாமல் அரைத்து பேஸ்ட் போல செய்து, பின்னர் உங்களுடைய முகத்தை சுத்தமாக தண்ணீர் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள்.

ஒரு சிறிய பௌலில் மசித்த வாழைப்பழத்தில் இருந்து 2 டீஸ்பூன் எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ஒரு டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, ஒரு டீஸ்பூன் பால் பவுடர் ஆகியவற்றை கலந்து நன்கு பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் இதனை முகத்தில் மாஸ்க் போல எல்லா இடங்களிலும் தடவிக் கொள்ள வேண்டும். முகம் முதல் கழுத்து பகுதி வரை தடவி கொள்ளுங்கள். கழுத்துக்களிலும் இறந்த செல்கள் மூலம் பருக்கள் அல்லது மருக்களாக மாறுவதை இந்த பேக் தடுக்கும்.

ஒரு பதினைந்து நிமிடம் வரை நன்கு உலர விட்டு பிறகு குளிர்ந்த நீர் கொண்டு சருமத்தை சுத்தமாக துடைத்து எடுத்து விட வேண்டும். இதுபோல வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் எப்போதுமே உங்களுடைய சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி புதிய செல்கள் புத்துணர்வு பெறச் செய்யும். முகம் பழைய பொலிவை மீண்டும் அடையும்.

Related posts

பாதங்களை அழகாக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

குங்குமப் பூ தரும் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்.

nathan

தோல் சுருக்கமா? இதோ டிப்ஸ்

nathan

மேக்கப் போடுவதில் மட்டுமல்ல கலைப்பதிலும் கவனம் அவசியம்

nathan

பெண்களே…. அந்தரங்க பகுதி ரொம்ப கருப்பா இருக்கா? எளிய நிவாரணம்

nathan

அழகாக இருக்க எளிய வழி,

nathan

உஷாரா இருங்க…! இந்த அறிகுறிகள் இருக்கா? இதோ எளிய நிவாரணம்…

nathan

சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க.

nathan

சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்!!

nathan