குறிப்பாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இந்த ஆரஞ்சு பழத்தை(ஆரஞ்சு தோல் பொடி) முகத்திற்கு பயன்படுத்தும் போது முகத்தில் ஏற்படும் பருக்களை தடுப்பதற்கு மிகவும் உதவுகிறது.
ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் : 1
நம் சருமத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் மற்றும் சரும அழகை அதிகரிக்கவும் ஆரஞ்சு பழத்தோல் மற்றும் பாதாம் உதவுகிறது.
எனவே ஆரஞ்சு பழத்தோலை இனி தூக்கி எரியாமல் வெயிலில் நன்றாக காயவைத்து, பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
இந்த ஆரஞ்சு பழத்தோல் பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும், பின்பு பாதாம் பருப்பையும் நன்றாக அரைத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.
இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். பின்பு அதனுடன் இரண்டு ஸ்பூன் பசும் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை முகத்தில் தடவி, நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை முகத்தில் இந்த கலவையை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ, சருமம் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும், வெண்மையாவும் காணப்படும்.
இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வரலாம்.
ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் : 2
ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். ஆரஞ்சு தோல் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.
அதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.
இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர சருமத்தில் ஏற்படும், கோடுகள் மற்றும் சுருக்கங்கள் நீக்குவதற்கு உதவியாக இருக்கும்.
அதுமட்டும் இன்றி சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு உதவியாக இருக்கிறது.
ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ்..!
ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் : 3
ஆரஞ்சு தோல் நன்றாக காயவைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த ஆரஞ்சு தோல் பொடியுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை, 1/2 ஸ்பூன் தேன், 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை சருமத்தில் தடவி 20 நிமிடம் வரை வைத்திருந்து, பின்பு சருமத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ சருமம் பொலிவுடன் காணப்படும்.
இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வரலாம்.
ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் : 4
ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு தோலை எடுத்துக்கொள்ளவும், அதனுடன் ஒரு ஸ்பூன் பசும்பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.
இந்த முறையை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், எண்ணெய் பசை கொண்ட சருமம், மேடுபள்ளம் கொண்ட சருமம் மற்றும் பருக்கள் ஆகிய பிரச்சனைகளை சரி செய்யும்.
அதுமட்டும் இன்றி சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இதனால் சருமம் எப்பொழுதும் பொலிவுடன் காணப்படும்.
ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள் : 5
ஆரஞ்சு பழத்தின் தோலின் பயன்: ஆரஞ்சு தோலை அரைத்து கொள்ளவும். பின்பு வேப்பிலையை அரைத்து பேஸ்ட்டாக வைத்து கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல், இரண்டு ஸ்பூன் வேப்பிலை பேஸ்ட் மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து இந்த கலவையை சருமத்தில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் வரை காத்திருந்து பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசை பிரச்சனை சரியாகும். மேலும் சருமத்தை எப்போதும் அழகாகவும் பொலிவுடனும் வைத்திட இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.