27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
181b4c53 b41b 4d9a b949 0ff40cb3b5dc S secvpf
ஃபேஷன்

பெண்கள் விரும்பி அணியும் வளையல்கள்

வளையல்களில் டிசைனர் வளையல்கள், தினமும் அணிந்து கொள்ளும் வளையல்கள், அகலமான துக்கடா வளையல்கள், சிமெட்ரிக் டிசைன் வளையல்கள், மிகவும் லைட் வெயிட்டான வளையல்கள், அலுவலகத்திற்கு அணிந்து கொள்ள ஏற்றாற் போன்ற வளையல்கள், நான்கு கம்பிகளால் செய்யப்பட் இனாமல் வளையல்கள், டி வடிவமுள்ள வளையல்கள், பூ வளையல்கள் எட்டு முகம் கொண்ட சிமெட்ரிகல் ஷேப் வளையல்கள், ரூபி எமரால்டு கொண்டு செய்யப்ட்ட வளையல்கள், என்று வளையல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

வளையல் என்றால் முன்பு வட்ட வடிவில் முழுவதும் பொன்னால் அல்லது சிவப்பு, வெள்ளை, பச்சை மற்றும் வைரக்கற்களால் செய்யப்பட்ட வளையல்களைத்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்பொழுதோ வளையல்களில் இத்தனை ரகமா? என்று வாயைப்பிளக்கும் அளவிற்கு மிகவும் அழகான டிசைன்களில் ஏராளமான வளையல்கள் வந்து விட்டன. டிசைனர் வளையல்கள் எப்பொழுதும் இருக்கும் டிசைன் போன்று இல்லாமல் மிகவும் ஃபேஷனாக வடிவமைக்கப்ட்டிருக்கும் இவை பார்ட்டிகளுக்கு அணிய ஏற்றவை.

தினமும் அணிந்து கொள்வதற்கென்றே பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் வளையல்களில் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் இல்லாமல் சாதாரணமாக இருக்கும். இவற்றை அழுக்குகள் சேராதவாறு பிளெயினாக இருக்கும். அன்றாடம் அணிந்து கொள்ள இவை ஏற்றவை. சாய்வான கம்பிகளாக வளையல் டிசைன் இருக்கும். இவற்றை துக்கடா வளையல்கள் என்கிறார்கள். இலை இரண்டு விரலைசேர்த்துவைத்தாற்போல், மூன்று விரலை சேர்த்து வைத்தாற் போல் உள்ளது.

மிகவும் எடை குறைவாக அதேசமயம் பார்வையாக உள்ள வளையல்களை மக்களின் விருப்பத்திற்கேற்ப மிகவும் அற்புதமாக வடிவமைக்கிறார்கள். அலுவலகத்திற்கு அணிந்து மிகவும்பட்டையான டிசைன்கள் இருப்பதில்லை. மிகவும் மெல்லிய வளையல்களில் சிறிய குண்டுகள் இணைக்கப்பட்டது போன்று மிகவும்நாகரிமான தோற்றத்தை தருவதாக அவ்வகை வளையல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பிளெயின் வளையல் அதனை தொடர்ந்து டிசைன் மறுபடியும் பிளெயின் மறுபடியும் டிசைன் இவை ஆரியோல் வளையல்களாகும். இவ்வகை வளையல்கள் செட்டாக அணியிம் போது அவை மிகவும் ரிச்சான லுக்கைத்தரும். வளையல் முழுவதும் பூக்களும் கொடிகளும் கொண்டு வடிவமைக்கப்படும் வளையல்கள் ஃப்ளோரல் வளையல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
181b4c53 b41b 4d9a b949 0ff40cb3b5dc S secvpf
அவற்றில் ஏராளமான டிசைன் வளையல்கள் இருப்பது குறிப்பிடதக்க ஒன்றாகும். ஓவல் மற்றும் சிமெட்ரிகல் ஷேப் வளையல்களும் பெரும்பாலும் பெண்களால் விரும்பி அணியப்படுகின்றன. அதேபோல் இன்ஃபினிடிஷேப், ஞிஷேப் வளையல்களை விரும்பி வாங்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஃ பேன்ஸி வளையல்களில் வரும் மாடல்களையும், டிசைன்களையும் நம்மால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

Related posts

பட்டுப்பெண்களின் பளபள புடவைகள்!

nathan

உலகின் விலையுயர்ந்த அழகிய காலணிகள்

nathan

நீங்களும் ஹீரோயின்தான்!

nathan

சிறுவர்களுக்கான கிறிஸ்மஸ் ஆடைகள்: baby boy christmas outfit

nathan

மெஹந்தி என்ற பெயரில் வடமொழி சொல்லில் அழைக்கப்படும் மருதாணி

nathan

உன்னையே நீ அறிவாய்!

nathan

100 புடவை கட்டுங்கள் புதுமைப் பெண்களே!

nathan

பெண்களை அதிகம் கவரும் பிளாட்டின நகைகளின் சிறப்பு தன்மைகள்

nathan

விழாக்கால அழகு பராமரிப்பிற்கு….

nathan