தேவையான பொருட்கள்:
- OHP சீட்
- டிசைன் பேப்பர்
- glass கலர் (பச்சை, அரக்கு, ராமர், ரோஸ், சிவப்பு, ஆரஞ்சு)
- பிரஸ்
- கருப்பு கலர் outline tupe
செய்முறை:
- முதலில் OHP சீட்டிற்கு கீழ்புறம் டிசைனை வைத்து கருப்பு கலர் outline tupe கொண்டு வரையவும். வரையும் போது இடைவெளி இருக்கக்கூடாது. ஏனென்றால் கிளாஸ் கலர் தண்ணீர் போல் இருக்கும்… இடைவெளி இருந்தால் அதன் மூலம் வெளியே வந்து விடும்…
- பின்பு 1மணிநேரம் காயவிடவும்.
- பறவைக்கு இறகு பக்கம் முதலில் ராமர் கலரை அடித்துவிட்டு உடம்பு முழுதும் ரோஸ் கலரை பிரஸ் துணைக்கொண்டு அடிக்கவும். இரண்டு கலர் சேரும் இடத்தில் கலந்து விடவும்.
- மரத்தின் காம்பிற்கு அரக்கு கலரையும், இலைகளுக்கு மஞ்சள், பச்சையும் மிக்ஸ் செய்து அடிக்கவும்.
- பூவின் நடுப்பகுதியில் சிவப்பு கலரையும் ஆரஞ்சு கலரையும் மிக்ஸ் செய்து அடிக்கவும். இதழுக்கு மஞ்சள் கலரை அடிக்கவும்.
- பின்பு நன்றாக நிழலில் ஒரு நாள் முழுவதும் காயவிடவும்…
- பின்பு அழகான வடிவத்தில் frame செய்து கொள்ளலாம்…
- அழகான OHP ஓவியம் தயார்.