31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சரும பராமரிப்பு

தோல் சுருங்காமல் தடுக்கும் தண்ணீர்

சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்! தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின் மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா?

“”ம்ஹும், அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கணும்பா” – இப்படி பெருமூச்சு விடுகிறீர்களா?
இதைப் படியுங்கள் முதலில்!

தண்ணீர் மருந்து ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு வயிற்றுப் பிரச்னை அவ்வளவாக வருவதில்லை! வயிறு நலமாக இருந்தால், நமது உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.

எலுமிச்சை உடம்புக்கு நல்லது!
குளிப்பதற்கு முன் – ஒரு வாளித் தண்ணீரில், ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக ஒரு “லெமன் பாத்’ எடுங்கள். இதன் புத்துணர்வையும் சரும மினு மினுப்பையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

தேமலை விரட்டுங்க!
நாட்டுமருந்துக் கடைகளில் கார்போக அரிசி என்று கேட்டால் தருவார்கள். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு பேஸ்ட் மாதிரி செய்து தோலில் தடவுங்கள். விரைவில் தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்!

மெருகுக்கு பப்பாளி!
நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்சியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் போல ஊறியபின் குளிக்கலாம்.

Related posts

காது அழகை பராமரிப்பது எப்படி?

nathan

சருமத்தைப் பளபளப்பாக்கும் அன்னாசி

nathan

கொசுக்கடியினால் ஏற்படும் சரும அலர்ஜியை தடுக்க இதை முயன்று பாருங்கள்!

nathan

சன் ஸ்கிரீனை வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் பெண்கள் கவனிக்கவேண்டியவை

nathan

தோல், முடி பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்

nathan

குங்குமப் பூ தரும் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்.

nathan

கிராம்பு எண்ணெய் (Clove Oil) சருமத்தில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. வயதான அறிகுறிகளை அகற்ற கிராம்பு எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

nathan

சருமத்தை பாதுகாக்கும் விளக்கெண்ணெய்

nathan

ஷவரில் குளிப்பதற்கு முன் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

nathan