பொலிவான மற்றும் அழகான சருமத்தை பெற அனைவரும் விரும்புகிறார்கள். பருவக்காலத்திற்கு ஏற்ப சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வறண்ட சருமம் அனைவருக்கும் ஒரு சவாலான பிரச்சனையாகவே உள்ளது. குறிப்பாக பெண்கள் வறண்ட சருமத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கேட்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், இதனால் உண்டாகும் பாதிப்புகள் அதிகம். குறிப்பாக இதனை குளிர்காலத்தில் கவனிக்கத் தவறி விட்டால், பல பிரச்சனைகள் ஏற்படும். சருமத்தில் ஈரப்பதம் இல்லாததால் சருமத்தில் உள்ள கொழுப்பு அமிலங்கள் குறைகின்றன. இவைதான் ஈரப்பதத்துடன் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவி செய்கிறது.
ஒருவருக்கு வறண்ட சருமம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. குளிர்காலம் மற்றும் வறண்ட சருமம் ஆகியவை ஒத்ததாக இருக்கின்றன. ஆனால் இந்த பருவத்தில் நீங்கள் சொறி மற்றும் அரிப்புகளை சுமக்க வேண்டியதில்லை. எனவே, வறண்ட சருமப் பிரச்சனைகளைக் கையாள்பவர்கள், உங்கள் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும் சில அற்புதமான மற்றும் எளிதில் செய்யக்கூடிய இயற்கை தீர்வுகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பால்
லாக்டிக் அமிலத்தின் காரணமாக வறண்ட சருமத்தைக் கட்டுப்படுத்த பால் உங்களுக்கு பெரிதும் உதவும். மேலும் பாலைப் பயன்படுத்துவதும் உங்களுக்கு சிரமமாக இருக்காது. சருமத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மெதுவாக பாலை தடவி, சிறிது நேரம் விட்டு, கழுவி வந்தால், கிடைக்கும் பலனால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நீங்கள் தூங்கும் முன் அல்லது அதிகாலையில் பாலை தடவலாம். இது சருமத்திற்கு மென்மையையும் பொலிவையையும் தருகிறது.
ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரையின் கலவை
சூரிய ஒளி, மாசு, வறட்சி போன்ற காரணங்களால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தடுக்க மாய்ஸ்சரைஸர் முக்கியம். அதற்கு இயற்கை முறையில் ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. இது சருமத்தை மென்மையாக்கி, சருமத்தை பருக்கள் இல்லாமல் காக்க உதவுகிறது. நீங்கள் இயற்கையான ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரையால் செய்யப்பட்ட ஸ்க்ரப் பயன்படுத்தலாம். இது உங்கள் சரும தோல்களை உரிக்க உதவும். மேலும் நீங்கள் அதை ஸ்க்ரப் செய்யலாம். சிறிது நேரம் கலவையை விட்டு பிறகு, நீங்கள் அதை கழுவவும். சிறந்த முடிவு உங்களுக்கு கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் உங்கள் சருமத்தை நீரேற்றமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் பிரகாசத்தையும், மென்மையையும் வழங்குகிறது. இது வறண்ட சருமத்தை நீக்குவதற்கான ஒரு உன்னதமான செய்முறையாகும். தேங்காய் எண்ணெயில் உள்ள லினோலிக் அமிலத்தின் காரணமாக, நீங்கள் முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்தையும் குணப்படுத்தலாம். எனவே, இந்த குளிர்காலத்திலும் தேங்காய் எண்ணெயை நீங்கள் பயன்படுத்தலாம்.
பாதாம் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் மற்றொரு சிறந்த சேர்க்கை பாதாம் எண்ணெய். பாதாம் எண்ணெய் வைட்டமின் ஏ மற்றும் ஈ ஆகியவற்றால் செறிவூட்டப்பட்டுள்ளது. மேலும் இது சிறிய காயங்கள் மற்றும் வெட்டுக்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. வறண்ட சருமத்தின் காரணமாக ஒருவர் இதை பெறலாம். பாதாம் எண்ணெய் ஒரு க்ளென்சர் மற்றும் மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.
பப்பாளி மற்றும் தேன்
பப்பாளியில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது மற்றும் தேன் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. எனவே, வறண்ட சருமத்தை நீக்குவதற்கு இரண்டின் கலவை முற்றிலும் அவசியம். மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை அடைய இரண்டு பொருட்களையும் பயன்படுத்தவும். பப்பாளி பேக் என்பது சருமத்தை அழகாக்க செய்யப்படும் மற்றொரு ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கில் பப்பாளி பழத்தை மசித்து, அத்துடன் சிறிது தேனை கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
ஷியா வெண்ணெய்
ஈரப்பதமூட்டும் கிரீம்கள் மற்றும் சோப்புகளில் ஷியா வெண்ணெய் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஷியா வெண்ணெய் அதன் இயற்கையான வடிவத்தில் எப்படி பயன்படுத்துவது என்று குழப்பமாகலாம். ஷியா வெண்ணெய் ஈரப்பதத்தை பூட்ட உதவுகிறது. மேலும் இது முகப்பருக்கள், வெயிலைத் தடுக்கிறது மற்றும் அரிப்புகளைத் தடுக்கிறது. இந்த சக்திவாய்ந்த மூலப்பொருள் குளிர்காலத்திற்கு உங்கள் சருமத்தின் சிறந்த நண்பராக இருக்கும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை உங்கள் முடிக்கும் சருமத்திற்கும் அதிகபட்ச நன்மைகளை வழங்குகிறது. கற்றாழை அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் வைட்டமின்கள் ஏ மற்றும் சி உடன் சேர்ந்து உங்கள் வறண்ட சருமத்தை குணப்படுத்த உதவும். இது தீக்காயங்கள் மற்றும் வறண்ட சருமத்திற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. மேலும், இது உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி மற்றும் மிகவும் தேவையான நீரேற்றத்தை அளிக்கிறது.