31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

இளம் வயதில் முகத்தில் சுருக்கம்: உங்களுக்குதான் இந்த விஷயம்

இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். இளமையிலேயே வயதானவர் போல் தோற்றமளித்தால் யாருக்குத்தான் கவலை வராது? உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது கவலை மறைந்தே போவது உறுதி. இதோ சில குறிப்புகள் உங்களுக்கு :

* காய்கறி பழ வகைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள். இயற்கையான காய்கறி, பழ வகைகளில் உள்ள விட்டமின் மற்றும் சத்துக்கள் தோளில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடியவை.
* வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும்.
* துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
* வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டியும் பார்க்காது.
* நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.
* கறிவேப்பிலையிலுள்ள விட்டமின் ஏ இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். அடிக்கடி துவையல் செய்து சாப்பிடலாமே. முகத்தில் சுருக்கம் என்ற கவலை இனியுமேன்?

Related posts

பளிச்சென்ற பொலிவான சருமத்தைப் பெற வேண்டுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் சர்க்கரை

nathan

ஒளிரும் பிங்க் நிற சருமத்தை பெற கடலை மாவை இதனுடன் இப்படி கலந்து பயன்படுத்தனும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

முகத்தின் அழகு பழத்தில் தெரியும்! அழகு குறிப்புகள்!!

nathan

கருவளையம் எளிதில் மறையச் செய்யும் அற்புத வைத்திய முறை !!

nathan

கோடையில் வெளியில் சென்று வந்த பின் முகத்திற்கு செய்ய வேண்டியவை

nathan

சந்தன ஃபேஸ் பேக்கை உபயோகித்தால் வெள்ளையாகலாம்

nathan

சிவப்பழகு சாதனங்கள்

nathan

வீட்டில் செய்யக்கூடிய டான் சருமத்திற்கான‌ 2 எளிய ஃபேஸ் பேக்

nathan