Beauty face
முகப் பராமரிப்பு

இளமையூட்டும் கடலை மா

அழகை பேணிக் காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும்.
இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும்.

நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.

இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.

கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள்.

பிறகு இதை முகத்தில் ‘பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பருக்கள் இருந்த படிப்படியாக மறைந்து போகும்.

தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு ‘பேக்’ போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.
Beauty face

Related posts

சோர்வுற்ற கண்களைப் புதுப்பிக்க எண்ணெய்

nathan

ஒரு சிறிய விதையில் இவ்வளவு நன்மைகளா..?

sangika

உங்களுக்கு தெரியுமா உடலில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற இப்படியொரு வழியா!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி முகம் கழுவினால் என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

nathan

மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க டிப்ஸ்

nathan

கண்களுக்கு கீழே கரு வளையமா…? இதை ஃபாலோ பண்ணுங்க…

nathan

அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .

nathan

கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…என்றும் இளமையாக தெரிய வேண்டுமா….அப்ப தினமும் செய்யுங்க…

nathan