28.6 C
Chennai
Friday, Dec 12, 2025
ed51374
Other News

ரஷ்யாவுக்கு எதிராக நாங்க ஒண்ணுமே பண்ணமாட்டோம்!அடிபணிந்த பிரபல நாடு

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 27வது நாளாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியும் ரஷ்யா போரை நிறுத்தவில்லை.

பல்வேறு நாடுகள் தடை
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், நேட்டோ நாடுகள் என பல்வேறு நாடுகளை கொண்ட அமைப்புகளும் ரஷ்யாவுக்கு எதிராக உள்ளது.

இந்நிலையில், ரஷ்யா நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அரசு தெரிவித்துள்ளது.

ரஷ்ய குடிமக்களின் சொத்துக்கள்…
இது தொடர்பாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் வுலின் கூறுகையில், ரஷ்ய குடிமக்களின் சொத்துக்கள் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் சொத்துக்கள் திருடப்படும் ரஷ்ய எதிர்ப்பு வெறியின் ஒரு பகுதியாக செர்பியா ஒருபோதும் இருக்காது.

ரஷ்யா நாட்டின் மீது எங்களால் பொருளாதார தடைவிதிக்க முடியாது. ரஷ்ய ஊடகங்களை நாங்கள் தடைசெய்ய மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையில் உலக நாடுகள் ரஷ்யாவை புறக்கணிக்கும் நிலையில், ​​செர்பியா ரஷ்யவின் பிரபல கேஸ் நிறுவனமான காஸ்ப்ரோம் உடன் ஒரு புதிய எரிவாயு ஒப்பந்தத்தை செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மகனை கடத்திவிட்டதாக கணவர் மீது மனைவி காவல்நிலையத்தில் புகார்

nathan

மேஷம் முதல் மீனம் வரை!ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

nathan

விமர்சனங்கள் குறித்து கிங்ஸ்லி மனைவி உருக்கம்

nathan

ராயன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் இதுதானா?

nathan

திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு..!

nathan

அண்ணன் செய்த வெறிச்செயல்!!தங்கையின் ஆடையில் மாதவிடாய் ரத்தக்கறை…

nathan

பிக் பாஸில் இருந்து வந்த பவித்ரா ஜனனிக்கு பலத்த வரவேற்பு

nathan

பீதியை கிளப்பும் பாபா வங்காவின் கணிப்பு -இனி இது தான் நடக்கப்போகுது

nathan

விதவையை திருமணம் செய்து மோசடி.. சேர்ந்து வாழ 50 பவுண் நகை

nathan