32.5 C
Chennai
Friday, May 31, 2024
19 1458363665 6 neem pack
முகப் பராமரிப்பு

பொலிவான முகத்தைப் பெற வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

வேப்பிலை சேர்க்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, அந்த வேப்பிலையைக் கொண்டு நேரடியாக முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், எவ்வளவு நன்மை கிடைக்கும்.

முக்கியமாக வேப்பிலையைக் கொண்டு வாரம் ஒருமுறை மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம். இங்கு பொலிவான முகத்தைப் பெற உதவும் வேப்பிலை ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து விடுமுறை நாட்களில் மேற்கொண்டு அழகை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

வேப்பிலை மற்றும் சந்தனம்

வேப்பிலை பொடியுடன் சந்தனப் பொடி சேர்த்து, ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவி வர, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்களின் தழும்புகள் போன்றவை நீங்கி, முகம் சுத்தமாகும்.

வேப்பிலை மற்றும் கடலை மாவு

இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்ற ஒன்று. அதற்கு வேப்பிலை பொடியுடன் கடலை மாவை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்கும்.

வேப்பிலை மற்றும் தேன்

வேப்பிலை சிறிது எடுத்து அரைத்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகத்தில் உள்ள சோர்வு நீங்கி, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

வேப்பிலை மற்றும் பப்பாளி

வேப்பிலை பொடியில் பப்பாளியை மசித்து சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தின் பொலிவு மேம்பட்டிருப்பதைக் காணலாம்.

வேப்பிலை மற்றும் தக்காளி

வேப்பிலை பொடியை தக்காளி சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகத்தில் உள்ள பிம்பிள் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

வேப்பிலை மற்றும் முல்தானி

மெட்டி இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சி வெளியேற்றும். அதற்கு வேப்பிலையை அரைத்து, அத்துடன் முல்தானி மெட்டி பொடியை சேர்த்து, அத்துடன் சிறிது தேங்காய் தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

19 1458363665 6 neem pack

Related posts

த்ரெட்டிங் செய்த பின் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை -தெரிந்துகொள்வோமா?

nathan

இளமையாக மாற்றும் பேஸ் மாஸ்குகள் -face packs

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…புருவங்ளை பராமரிக்க எளிய வழிகள்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…தாடியின் வளர்ச்சியை வேகமாக தூண்டும் சில எளிய இயற்கை வழிகள்!!!

nathan

உதடுகளை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

மூக்கின் மேல் சொரசொரவென்று உள்ளதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பட்டுபோல சருமம் மின்ன இயற்கை ஃபேஷியல்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தினமும் மேக்கப் போடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

nathan

உங்க உதட்டில் உள்ள கருமையைப் போக்கி, பிங்க் நிறத்தில் மாற்ற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan