27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
22 62200
அழகு குறிப்புகள்

உக்ரைன் சுற்றுலா பயணிகளிடையே கருத்து மோதல்! (Video)

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஏழாவது நாளாகவும் போர் நீடித்துள்ளது. இந்த போரின் போது இரு தரப்பினரும் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளனர்.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், உலக நாடுகள் பலவும் ரஷ்யாவிற்கு எதிராக திரும்பியுள்ளன. பொருளாதார தடைகள் உள்ளிட்ட பல்வேறு தடைகள் ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கைக்கு வருகை தந்துள்ள உக்ரேனியர்களுக்கும் ரஷ்யர்களுக்கும் இடையில் அமைதியின்மை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இரண்டு ரஷ்ய பெண் சுற்றுலாப் பயணிகள் அவர்களுடன் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

 

இவை தொடர்பான காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் வெடித்துள்ள யுத்தம் காரணமாக, விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாலும், வன்முறை அதிகரிப்பதாலும் பல சுற்றுலாப் பயணிகள் வீடு திரும்ப முடியாமல் இங்கு சிக்கித் தவிக்கின்றனர்.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, ஏறக்குறைய 4,000 உக்ரைனிய சுற்றுலாப் பயணிகளும் 10,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும் தற்போது இலங்கையில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா பயணிகள் உள்ள சுற்றுலா விடுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிக்க பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

12 ராசிக்கும் தமிழ் பிலவ வருட புத்தாண்டு பலன்கள்.. திடீர் அதிர்ஷ்டம் என்ன?

nathan

தவறான அழகு குறிப்புகள் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்….

sangika

முகத்திற்கான க்ளென்ஸிங் – அழகு குறிப்புகள்

nathan

ஒரு குறைபாடற்ற தோலுக்கு மஞ்சளினால் ஏற்படும் 7 நன்மைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா? முகப் பொலிவை அதிகரிக்கும் ட்ராகன்!

nathan

மிகச் சிறந்த நம்பகமான தீர்வு… முகத்தில் முடி வளர்ச்சியா?

nathan

கோடைக்கால கண் பராமரிப்புக்கு எளிய வழிகள்!…

nathan

சிம்பிள் டிப்ஸ்..! முடி உதிர்வா கவலை வேண்டாம்.!

nathan

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான கோடைக்கால ஃபேஸ் பேக்குகள்

nathan