30.6 C
Chennai
Monday, Jun 17, 2024
ace mask
முகப் பராமரிப்பு

முகத்திலுள்ள தழும்புகளை நீக்க வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

முகப்பரு வந்து போன பின்னர் விட்டுச் செல்லும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் உங்களுடைய அழகுக்கு குந்தகம் விளைவிக்கின்றன.

சந்தைகளில் கிடைக்கும் சாதாரண சரும பராமரிப்பு கிரீம்களைக் கொண்டு இந்த தழும்புகளை உங்களால் அவ்வளவு சீக்கிரம் நீக்கி விட முடியாது. எனினும், அதிர்ஷ்டவசமாக சில இயற்கையான நிவாரணங்களைக் கொண்டும் கூட முகப்பரு தழும்புகளை விரட்ட முடியும்.

முகப்பரு தழும்புகளை வீடுகளிலேயே விரட்டுவதற்கான சில வழிமுறைகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். எனினும், இந்த வழிமுறைகளை சில நாட்கள் வரையிலும் பின்பற்றும் பொறுமை இருந்தால் தான், நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயைத் தடவுவதன் மூலம் தழும்புகளை குறைத்திட முடியும். ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவிக் கொண்ட பின்னர், மிதமான நீராவியில் முகத்தைக் காட்டுங்கள். இதன் மூலம் துளைகள் சுத்தமாகி, தழும்புகளின் அடர்த்தி குறைந்து விடுகிறது.

சந்தனம்

சந்தனத்தை அரைத்து தடவிக் கொள்வதன் மூலம் தழும்புகளை மிதமாக்கி வி முடியும். சந்தனப் பொடியை, ரோஸ் வாட்டர் அல்லது பாலுடன் கலக்கவும். உங்களுடைய முகத்திலுள்ள தழும்பிளல் இந்த கலவையை தடவி விட்டு, 1 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக அலசி கழுவி விடவும்.

பாதாம்

பால் அல்லது தண்ணீரில் பாதாமை 12 மணிநேரம் ஊற வைக்கவும். பாதாம் கொட்டையின் தோலை உரித்து விட்டு, நன்றாக அரைக்கவும். இந்த கலவையுடன் ரோஸ் வாட்டரைக் கலந்து, தழும்புகளில் தடவிக் கொள்ளுங்கள்.

எலுமிச்சை சாறு

ஒரு நாளைக்கு 3 முறை வீதம் எலுமிச்சை சாற்றை இரண்டு வாரங்களுக்கு குடிப்பதன் மூலமும் தழும்புகளை மறையச் செய்ய முடியும்.

சமையல் சோடா

சமையல் சோடாவைக் கொண்டு உங்களுடைய முகத்தில் தேய்த்து விடுவதன் மூலம் முகத்தின் தழும்பை குறையச் செய்ய முடியும். சமையல் சோடாவுடன், தண்ணீரைக் கலந்து 1 முதல் 2 நிமிடங்களுக்கு தேய்த்து விடவும். பின்னர் மிதவெப்பமான தண்ணீரில் கழுவி விடுங்கள். இதை தொடர்ந்த செய்து வரவும்.

உருளைக்கிழங்கு

தழும்புகளை குறைப்பதில் உருளைக்கிழங்கும் உதவுகிறது. இதில் கந்தகமும், பொட்டாசியமும் கலந்திருக்கிறது. உருளைக்கிழங்கை பச்சையாக எடுத்து அரைத்து, அந்த சாற்றைப் பிழிந்து தழும்பு உள்ள இடத்தில் தடவவும்.

Related posts

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் சருமத்தை சில்லுனு மாற்ற வேண்டுமா! இதை முயற்சி செய்யலாமே

nathan

15 நிமிடத்தில் முகத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்க வேண்டுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நெற்றியில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்கான 6 எளிய வழிகள்!!!

nathan

கரும்புள்ளிகளை போக்கும் ஸ்ட்ராபெர்ரி பேஷியல்

nathan

கண்ணாடி அணியும் பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

nathan

சரும கருமையைப் போக்க வேண்டுமா? அப்ப சோள மாவு ஃபேஸ் பேக் போடுங்க…

nathan

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க…

sangika

இந்தியப் பெண்கள் மூக்குத்தி அணிவதன் முக்கியத்துவம் என்ன?தெரிஞ்சிக்கங்க…

nathan

முப்பது வயதில் முகச் சுருக்கங்களுக்கு பை பை சொல்லுங்கள்!!

nathan