27.1 C
Chennai
Saturday, May 24, 2025
09 september month
Other News

செப்டம்பர் மாதம் பிறந்தவர்களின் குணாதிசயங்களைப் பற்றி ஆராயலாமா?தெரிஞ்சிக்கங்க…

‘வேக் மீ அப் வென் செப்டம்பர் என்ட்ஸ்’ என்பது கிரீன்டேவின் புகழ்பெற்ற ஒரு பாடலாகும். இப்போது உண்மையிலே விழித்துக் கொண்டு கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது; ஆம் செப்டம்பர் மாதம் பிறந்து விட்டது அல்லவா?

வருடத்தின் ஒன்பதாம் மாதமான இதனை புதன் கிரகம் ஆளுகிறது. இந்த மாதத்தின் முதல் 20 நாட்கள் கன்னி ராசி ஆளும். மீதமுள்ள நாட்களில் துலாம் ராசி ஆளும்.

காதல் மிக விரிவாக இருக்கும்

கன்னி ராசிக்காரர்கள் கவனத்துடனும், கச்சிதத்தை எதிர்ப்பார்ப்பவர்களாகவும், முடிவுக்கு வர முடியாத நபர்களாக இருப்பார்கள். தங்களைப் பற்றியும் தங்களை சுற்றியுள்ள உலகத்தைப் பற்றியும் குறை கண்டு கொண்டே இருப்பார்கள். இருப்பினும், விவரங்களுக்காக அவர்கள் ஆர்வமாக இருப்பதால் சிறந்த எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக மற்றும் உரையாடல் செய்பவராக இருப்பார்கள். சிறந்த தர்க்க ரீதியான அறிவையும் திடமான உள்ளுணர்வையும் கொண்டிருப்பார்கள்.

கன்னி ராசிக்காரர்கள் = நிறைவு விரும்பிகள்!

ஜோதிட உலகமாக இருந்தாலும் கூட கன்னி ராசிக்காரர்கள் நிறைவு விரும்பிகள் ஆவார்கள். அதனால், அவர்கள் சிறந்த மருத்துவர்கள், ஆசிரியர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் இன்னும் பலராக ஆவார்கள். இவர்கள் மூர்க்கத்தனமாகவும், வசைப்பாங்குடையவராகவும் இருப்பார்கள். இவர்களின் வீழ்ச்சிக்கு இதுவே காரணங்களாக இருக்கும். மேலும், எல்லா விஷயங்களும் பூரணமாக இருக்கவும், விரிவான முறையில் இருக்கவும் தொடர்ச்சியான முறையில் இவர்கள் நச்சரிப்பதால், இவர்கள் பெரும்பாலும் தனியாகவே வேலை செய்வார்கள்.

கணிக்க முடியாத மனநிலை மாற்றத்தை பெறுவார்கள்

புதனால் ஆளப்படுவதால், கன்னி ராசிக்கார்கள் கணிக்க முடியாத மனநிலை மாற்றத்தைப் பெறுவார்கள். அதனால் இரு துருவ உச்சத்திற்கு அவர்களின் மனநிலை செல்லலாம். இந்த ஒரு காரணத்தினாலேயே அவர்களின் வீழ்ச்சி சுலபமாகிவிடும். இருப்பினும், தங்களை அமைதிப்படுத்த அவர்கள் கற்றுக் கொண்டு, தாங்கள் சந்திக்கும் சிலவற்றை ஏற்றுக்கொண்டால், எதையும் செய்யலாம்!

தவறாக புரிந்துக் கொள்ளப்பட்ட ஆன்மாக்கள்

பெரும்பாலும், கன்னி ராசிக்காரர்கள் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட ஆன்மாக்களாக உள்ளனர். அனைத்தையும் விரிவானதாக பார்க்கும் குணத்தை கொண்டுள்ளதால், அவர்களால் யாரிடமும் சுலபமாக நெருங்க முடிவதில்லை. அதனால் அவர்களைப் பற்றி அனைவரும் வேறு மாதிரி யோசிப்பார்கள். அவர்களுக்குள் உள்ள உணர்ச்சி ரீதியான ஆன்மாக்கள் பிறரின் நலனுக்காக உழைக்கும். அனைவரும் சந்தோஷமாக இருப்பதை உறுதி செய்ய அவர்கள் விரும்புவார்கள். ஆனால் தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்த அவர்கள் சிரமப்படுவார்கள்.

விபத்துக்கான வாய்ப்பு?

கன்னி ராசிக்காரர்கள் விபத்துக்களை சந்திக்க நேரிடும். தீவிரமான விபத்துக்களை தவிர்க்க அவர்கள் மிகுந்த கவனத்தை கொள்ள வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய புண்களை அவர்கள் சந்திக்க வேண்டி வரும்.

Related posts

முதல் நாள் லியோ படத்தின் வசூல் இத்தனை கோடி வருமா..

nathan

98 வயது மூதாட்டி தன் 105 வயது சகோதரியுடன் பிறந்த நாள்

nathan

தமிழீழ பெண்ணை சீமான் ஏமாற்றினார்..

nathan

பரபரப்பாக நடந்த திருமணம் : காரில் காதலிக்கு தாலி கட்டிய காதலன்!!

nathan

பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா..

nathan

நடிகர் விஜயகாந்துக்கு மத்திய அரசு அறிவித்த உயரிய விருது!

nathan

குள்ளமான பாடிபில்டருக்கு திருமணம்

nathan

GYM-ல் வெறித்தனமாக WORKOUT செய்யும் லாஸ்லியா

nathan

பிறந்தநாள் கொண்டாடிய சாக்ஷி அகர்வால்

nathan