36.4 C
Chennai
Saturday, Jul 11, 2026
அழகு குறிப்புகள்

முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமையைப் போக்கி, சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்ட..!சூப்பர் டிப்ஸ்

இந்த கட்டுரையில் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமையைப் போக்கி, சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்டும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதை தினமும் செய்தால், நீங்கள் எப்போதும் பளிச்சென்று அழகாக ஜொலிக்கலாம்.
உங்க முகமும், கழுத்தும் ரொம்ப கருப்பா இருக்கா? அதை நீக்க இதோ சில வழிகள்!
வழி #1

ஆட்டுப் பால், பேக்கிங் சோடா மற்றும் கடலை மாவு போன்றவை சருமத்தைப் பெற உதவும் சிறப்பான பொருட்கள். ஆட்டுப் பால் சருமத்திற்கு மென்மை அளிக்கும், கடலை மாவு மற்றும் பேக்கிங் சோடா இறந்த செல்களை நீக்கி, சரும நிறத்தை அதிகரித்துக் காட்ட உதவும்.


தேவையான பொருட்கள்:

* ஆட்டுப் பால் – 2 டேபிள் ஸ்பூன்

* கடலை மாவு – 1 டீஸ்பூன்

* பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* முதலில் ஒருது பௌலில் ஆட்டுப் பால் மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, முகத்தில் தடவ வேண்டும்.

* 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

வழி #2

எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருட்கள். இவை சருமத்திற்கு ஊட்டமளிப்பதோடு, சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். இந்த பொருட்களைக் கொண்டு ஸ்கரப் தயாரித்து, சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள கருமைகள் மாயமாய் மறைந்துவிடும்.

* எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்

* சர்க்கரை – 1 டீஸ்பூன்

* தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்

* ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.


வழி #3

பால் பவுடர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க மற்றும் சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரிக்க மிகவும் நல்ல பொருள். பால் பவுடரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்திற்கு பொலிவைத் தரும்.

* பால் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

* ஆரஞ்சு ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.

* 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகம் மற்றும் கழுத்தை கழுவ வேண்டும்.

வழி #4

தேன் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. சொல்லப்போனால் இது ஒரு வரப்பிரசாதம். தக்காளியில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கத் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளன.

* தக்காளி சாறு – 1 டேபிள் ஸ்பூன்

* தேன் – 1 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

* ஒரு சிறிய கிண்ணத்தில் தக்காளி சாறு, தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு ஒருசேர கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை கருப்பாக இருக்கும் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் மட்டுமின்றி, கை, கால்களிலும் தடவலாம்.

* 15 நிமிடம் நன்கு ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

வழி #5

மஞ்சளில் மருத்துவ பண்புகள் அதிகம் உள்ளது. இது பொலிவிழந்து காணப்படும் சருமத்தை பொலிவாக்க உதவுவதோடு, முகத்தில் உள்ள பருக்களையும் தடுக்கும். ஆரஞ்சு ஜூஸ், சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்ட உதவும்.

* ஆரஞ்சு ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இறுதியில் துணியால் துடைத்துவிட்டு, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

Related posts

சில பெண்களுக்கு, வாய்க்கு மேலே மீசை போன்று முடி வளரும். அத்தகைய முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு, கடலை மா….

nathan

மேனியின் பளபளப்பை அதிகரிக்க ஸ்கின் லோசனை இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்……

sangika

நீங்களே பாருங்க.! பிகினி உடையில் கடற்கரையில் இருந்தபடி நாகினி நடிகை

nathan

நச்சென்ற அழகுடன் திகழணுமா?

nathan

இதை வெறும் மாதத்திற்கு ஒரு முறை என செய்து வந்தாலே போதும் உங்கள் பாதங்கள் பட்டு போன்று பளபளக்கும்!…

sangika

கொள்ளை கொள்ளும் அழகை எப்படி கேரளத்து பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது புதிரான கேள்வியாக உங்கள் மனதில் இருந்தால், அதற்கான பதில்!….

sangika

இதை தொடர்ந்து 15 நட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்

nathan

வாவ்… அம்புட்டு அழகு! வனிதாவின் உடன் பிறந்த தங்கையா இது? நீங்களே பாருங்க.!

nathan

ரச்சித்தாவிடம் எல்லை மீறி நடந்துகொண்ட ராபர்ட் மாஸ்டர்

nathan