மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான பருப்பு கடைசலை செய்து அசத்துங்கள்.
பேச்சுலர்கள் கூட இதை ஈஸியாக செய்யலாம். ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள் அடிக்கடி செய்வீர்கள்…
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 100 கிராம்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 5
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1 (பெரியது)
தாளிப்பதற்கு…
எண்ணெய் – தாளிக்க
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்து – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் குக்கரில் துரவம் பருப்புடன் தண்ணீர் சேர்த்து அத்துடன் பச்சை மிளகாய், சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
இறக்கிய பருப்பை ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, அதனை பருப்பில் சேர்த்து கடைந்தால் சுவையான பருப்பு கடையல் ரெடி.
இந்த பருப்பு கடைசலை சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும்….