27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201701030954069681 women in love SECVPF
Other News

இந்த ராசிக்காரங்க எப்பவும் பழைய காதல மறக்க முடியாம கஷ்டப்படுவாங்களாம்..

கடகம்

கடக ராசிக்காரர்கள் தங்களின் முன்னாள் காதலை நினைத்து வருந்ததா நேரம் மிகவும் குறைவுதான். தற்போதைய உறவில் இவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சி இல்லாமல் இருந்தாலும் சரி கடந்த கால உறவில் எப்படி இருந்தோம் என்று இவர்கள் நினைத்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களின் கண்களுக்கு பழைய உறவு எப்பொழுதும் சிறப்பானதாகவே தெரியும். இவர்கள் தங்களின் தற்போதைய காதலர் முதற்கொண்டு அனைவரையும் தங்கள் முன்னாள் காதலருடன் ஒப்பிடுவார்கள். அனைவரையும் விட அவர்களே சிறந்தவர்களாக இவர்கள் எண்ணுவார்கள். இதனாலேயே இவர்கள் விரைவில் தங்கள் முன்னாள் காதலை தேடி செல்ல தொடங்கி விடுவார்கள், ஏன் அந்த காதல் முன்னர் தோல்வியடைந்தது என்று அவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

ரிஷபம்

 

இவர்கள் ஒருபோதும் வெளியே வந்து இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், முன்னாள் காதலில் இருந்து வெளிவர இவர்களுக்கு நீண்ட காலம் ஆகும். முன்னாள் காதலை இன்னும் நினைத்துக் கொண்டிருப்பதை சொல்வதற்கு பதில், அனைத்தையும் மறந்து விட்டதாக பொய் கூறுவார்கள். இது அப்போதைய சூழலில் இருந்து தப்பிக்க கூறும் பொய்யாகும். இவர்கள் முன்னாள் காதலை விட்டு வெளியேற உண்மையாக முயன்றால் அது இவர்களால் எளிதாக முடியும். சுற்றி யாரும் இல்லாத போது இவர்கள் தங்கள் முன்னாள் கதலி நினைத்து நிச்சயம் அழுவார்கள். சரியான துணை கிடைத்தால் இவர்கள் விரைவில் முன்னாள் காதலில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது.

துலாம்

 

துலாம் ராசிக்காரர்கள் எப்பொழுதும் தங்கள் முன்னாள் காதலை பிடித்து தொங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் இல்லாமல் அவர்களின் முன்னாள் காதலரின் வாழ்க்கை தாங்கள் இல்லாமல் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் தாங்கள் அவர்களை தொடர்ந்து கண்காணிப்பதாக இவர்கள் கூறுவார்கள். ஆனால் அவர்களின் மனதில் இருக்கும் எண்ணமே வேறு, இவர்களால் தங்கள் முன்னால் காதலை மறக்க முடியாமல் அவர்களை மிஸ் பண்ணுவதன் அறிகுறிதான் இது. தங்கள் முன்னால் காதலைப் பற்றி தெரிந்து கொள்ள இவர்கள் எப்பொழுதும் ஆர்வமாக இருப்பார்கள், வாய்ப்பு கிடைத்தால் தங்கள் காதலை புதுப்பித்துக் கொள்ள இவர்கள் தயாராய் இருப்பார்கள்.

கன்னி

 

இவர்கள் வெளிப்படையாக இதனை காட்டிக்கொள்ள மாட்டார்கள், ஆனால் எப்பொழுதும் தங்கள் முன்னால் காதலைப் பற்றி நினைத்து வாடுவார்கள். இவர்கள் எதேர்சையாகவோ அல்லது தெரியாமலோ அவர்களுக்கு போன் பண்ணவோ, மெசேஜ் பண்ணவோ மாட்டார்கள், அது திட்டமிட்டு செய்வதுதான். அவர்களின் முன்னால் காதல் பற்றிய எண்ணங்கள் எப்பொழுதும் அவர்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். தங்களின் காதல் ஏன் தோல்வி அடைந்தது அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்து அதனை சரிசெய்து கொள்ள முயற்சிப்பார்கள். தான் முன்னர்போல இல்லை என்பதை அவர்களுக்கு தெரியவும் படுத்துவார்கள். மீண்டும் இணையும் வாய்ப்புக்காக இவர்கள் எப்பொழுதும் காத்திருப்பார்கள்.

மீனம்

 

மீன ராசிக்காரர்கள் அவர்களின் முன்னாள் காதலை நினைத்து வருந்தவில்லை என்றால்தான் ஆச்சரியம். ஏனெனில் இவர்கள் அதனை விட்டு வெளியே வர தங்களுக்குத் தானே உதவிகொள்ள மாட்டார்கள். தங்கள் முன்னாள் காதல் தொடர்பான அனைத்து விஷயங்களையும் இவர்கள் பத்திரமாக வைத்திருப்பார்கள். இந்த நினைவூட்டல்கள் அனைத்தையும் வைத்திருப்பது, அவற்றைப் படிப்பதன் மூலமோ அல்லது கேட்பதன் மூலமோ தங்களைத் துன்புறுத்த விரும்பும் போது அவர்களுக்கு உதவியாக இருக்கும். தங்களின் முன்னாள் காதல் இனி தங்கள் வாழ்க்கையில் இல்லை என்னும் உண்மையை இவர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.

Related posts

திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஹன்சிகா

nathan

கொடிகட்டி பறந்த நடிகர் உணவு டெலிவரி செய்கிறாரா?புகைப்படம்

nathan

ஆதிவாசி தொழிலாளிக்கு அடித்த ரூ.12 கோடி பரிசு!’ஒரே நாளில் கோடீஸ்வரர்’

nathan

கள்ளக் காதலியுடன் கணவன் உல்லாசம்.. நேரில் பார்த்த மனைவி..

nathan

வெளிநாட்டில் தமிழருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்… லொட்டரியில் பெருந்தொகை வென்று சாதனை

nathan

ஐஸ்வர்யா ராஜேஷின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

சனிப் பெயர்ச்சி 2023:எந்த ராசிக்கு என்ன பலன்கள்?

nathan

மனைவியுடன் நடிகர் ஆர்யாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

nathan

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

nathan