29.7 C
Chennai
Friday, Jul 18, 2025
p39
இனிப்பு வகைகள்

எக்லஸ் கேரட் புட்டிங்

தேவையானவை:
கேரட் – 200 கிராம் (துருவியது)
கோதுமை மாவு – ஒரு கப்
மைதா மாவு – ஒரு கப் +
1 டேபிள்ஸ்பூன் (தூவ)
ஆப்ப சோடா – முக்கால் டீஸ்பூன்
மசாலா பவுடர் – அரை டீஸ்பூன்
தேன் – கால் கப்
பால் – அரை கப்
உருக்கிய வனஸ்பதி – முக்கால் கப்
பொடித்த வெல்லம் – ஒரு கப்

மசாலா பவுடர் செய்ய:
கிராம்பு – 1
லவங்கப் பட்டை – ஒரு சிறுதுண்டு
ஜாதிபத்ரி – சிறிதளவு
(இவற்றை எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.)

செய்முறை:
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் தேன், பால், வனஸ்பதி சேர்த்து ஒரு கொதி வந்ததும், இறக்கி, வெல்லக் கரைசலில் சேர்க்கவும். மசாலா பவுடர் மற்றும் தேவையானவற்றில் உள்ள மற்ற பொருட்களையும் இந்தக் கலவையில் சேர்த்துக் கலக்கவும். நடுவில் குழிவான (படம் பார்க்க) வட்ட வடிவ அலுமினியம் மோல்டில் வெண்ணெய் தடவி, மைதா மாவு சிறிது தூவி விடவும். இதில் கலந்த கலவையை ஊற்றவும்.

குக்கர் பாத்திரத்தின் உள்ளே தட்டு வைத்து, அதன் மேல் 3 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும், அலுமினியம் மோல்டை இதன் உள்ளே வைக்கவும். குக்கர் பாத்திரத்தை அலுமினியம் ஃபாயிலால் மூடவும். இல்லையென்றால், புட்டிங் சொத சொதவெனஆகிவிடும். இதற்கு ஒரு சரியான மூடியால், தண்ணீர் உள்ளே போகாதவாறு மூடிவிடவும். சரியாக ஒரு மணி நேரம் பிறகு குக்கர் தானாகவே கீப் வார்ம் மோடுக்கு வந்துவிடும். பிறகு எடுத்து துண்டுகள் போடவும்.
p39

Related posts

பால் பணியாரம்

nathan

கருப்பட்டி நெய்யப்பம்

nathan

உலர் பழ அல்வா

nathan

அதிரசம், மைசூர் பாகு செய்ய வேண்டுமா??

nathan

குழந்தைகளுக்கு பிடித்தமான பீட்ரூட் அல்வா

nathan

ரவா லட்டு செய்வது எப்படி

nathan

பால்கோவா – AMC cookware-ல் சமையல் குறிப்பு

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான ஹாட் சாக்லேட்

nathan

சுவையான ராகி பணியாரம்

nathan