19a80747 2656 484c 95d0 0dbb10521a6c S secvpf
சைவம்

மாங்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

சாதம் – ஒரு கப் (உதிரியாக வடித்தது),
கிளிமூக்கு மாங்காய் (பழுக்காமல், ஸ்வீட்டான மிதமான மாங்காய்) – 3
கடுகு – 2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 3 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,
வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
காய்ந்த மிளகாய் – 3,
நறுக்கிய கொத்தமல்லித்தழை – கால் கப்,
மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க:

தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
கடுகு – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
• மாங்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

• மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகைப் போட்டு, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வறுபட்டதும் மாங்காய் துருவலை போட்டு வதக்கி, மசாலா விழுது, மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும்.

• 2 நிமிடம் கழித்து வடித்த சாதத்துடன் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

• கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

19a80747 2656 484c 95d0 0dbb10521a6c S secvpf

Related posts

சிறுகிழங்கு பொரியல்

nathan

சுவையான குடைமிளகாய் காளான் மிளகு வறுவல்

nathan

ஜீரண சக்தியை தூண்டும் சுக்கு மல்லி குழம்பு

nathan

கத்தரிக்காய் ரைஸ் செய்வது எப்படி

nathan

காளான் பொரியல்

nathan

அரைக்கீரை மசியல்

nathan

உருளைக்கிழங்கு புலாவ்

nathan

கொப்பரி பப்பு புளுசு

nathan

பாஸ்தா பிரியாணி

nathan