31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

கழுத்து கருப்பா இருக்கா? பளிச்சென மாற்ற சூப்பர் பேக்குகள்,

முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம்.

சிலரது முகம் பளபளப்பாய் இருக்கும். ஆனால் கழுத்தைச் சுற்றி கருமை சூழ்ந்திருக்கும்.
கழுத்தின் கருமையைப் போக்க அழகு நிலையம் சென்று காசை வீணாக்குகின்றனர் இன்றைய கால பெண்கள்.

ஆனால் வீட்டில் இருந்தபடியே சில பேக்குகளை செய்து, கழுத்தை பளிச்சென மாற்றலாம்.

எலுமிச்சை

தினசரி குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக கழுத்தின் கருமை பகுதிகளில் எலுமிச்சை சாற்றினை தடவி ஊறவைக்கவும்.
பின்னர் குளித்தால் கழுத்தின் கருமை படிப்படியாக மறையும்.

பால்பவுடர் பேக்
முதலில் ஒரு டீஸ்பூன் பால் பவுடர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும்.
இதில் அரை டீ ஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து கலந்து பசை போல கலக்கவும்.
இந்த பேக்கை முகம், கழுத்து பகுதிகளில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி கழுத்தின் கருமை வெகுவாக மறையும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்களை தோல் நீக்கி சீவி எடுத்துக்கொள்ளவும்.
அதை கழுத்துக் கருமை உள்ள பகுதிகளில் தேய்த்து கொள்ளவும்.
பிறகு அரை மணிநேரம் கழித்து குளிக்க கருமை படிப்படியாய் மறையும்.

தக்காளி பேக்
தக்காளியை நன்றாக மசித்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதிகளில் அப்ளை செய்யவும்.

Related posts

சூப்பர் சாஃப்ட் சருமம் வேணுமா! இதோ ஒரு சிம்பில் டிரிட்மென்ட்

nathan

சரும வகைகளும்… அதற்கான சிறப்பான பேசியல் பேக்குகளும்…

nathan

பெண்களே உங்க முகத்தில் அழுக்கு அதிகமா இருக்குற மாதிரி இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

இதோ எளிய நிவாரணம்! சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட ஐந்து எளிய வழிமுறைகள்!!!

nathan

பருக்கள் மாயமாய் மறைந்து போக முயன்று பாருங்கள்…

sangika

வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்

nathan

உங்கள் முகத்தில் குழிகள் அதிகம் உள்ளதா? அதை மறைக்க இதோ சில வழிகள்!!!

nathan

முகப்பொழிவு தரும் துவரம்பருப்பு

nathan

உடனடியாக வெள்ளையாக வேண்டுமா? முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் போடுங்க!

nathan