தேவையான பொருள்கள்
முட்டை – 2
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருஞ்சீரகம் – சிறிதளவு
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
செய்முறை
முட்டைகளை முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வேக வைத்துக் கொள்ளவும்.
முட்டை வெந்தவுடன் ஓட்டை நீக்கி விட்டு இரண்டாக வெட்டி வைக்கவும்.
மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
பின்னர் அதில் முட்டையை போட்டு 2 நிமிடம் அப்படியே வைக்கவும். பின்னர் மறுபுறம் திருப்பி போட்டு சிறிது நேரம் வைத்து மசாலா முட்டையில் நன்றாக சேர்ந்ததும் எடுத்து பரிமாறவும்.
சுவையான முட்டை மிளகு பிரட்டல் ரெடி.
இது குழந்தைகளுக்கு சாதத்துக்கு சைட் டிஷ்ஷாக கொடுக்கலாம். அல்லது சான்ட்விச்சில் நடுவே வைத்துக் கொடுக்கலாம்.