32.6 C
Chennai
Tuesday, Jul 8, 2025
21 61b1b70
சரும பராமரிப்பு

வெயிலில் கருப்பான முகத்தை பொலிவாக்க வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

பொதுவாக வெயில் காலங்களில் நம் சரும நிறம் சற்று கருப்பாக காணப்படுவது வழக்கம் தான். இன்னும் சிலருக்கு முகத்தில் வந்த முகப்பருக்கள் அப்படியே கருப்பாக மாறி விடும்.

பலருக்கு முகத்தில் தோல் சுருக்கம் ஏற்படும், முகம் வறண்டும் காணப்படும்.

இதற்கு உங்கள் வீட்டிலேயே முகத்தை அழகு படுத்த ஏராளமான அழகு குறிப்பு பொருட்கள் உள்ளன. அவை உங்கள் கருப்பான முகத்தை மறைத்து அழகாகவும், பளிச் சென்றும் காட்டும்.

தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

 

4 டேபிள் ஸ்பூன் பால், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, சருமத்தில் வெயில்படும் இடத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். இந்த முறையானது எண்ணெய் பசை சருமத்திற்கு சிறந்தது.

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 3 புதினா இலைகள், சிறிது தயிர் சேர்த்து கலந்து, அதனை நன்கு பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி வட்ட வடிவில் 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அனைத்து அழுக்குகளும் வெளியேறி, சருமம் கருமை அடைவதை தடுக்கும்.

முகத்தின் கருமையை போக்க அரைத்த அன்னாசி பழம், திராட்சை விதை ஆயில், அரைத்த பப்பாளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

முகத்தில் ஏற்படும் பிம்பிளை போக்க 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் சந்தன தூள், புதினா, துளசி இலைகள் சேர்த்து கலந்து அதனை சருமத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள வெப்பம் நீக்கப்பட்டு, சருமம் பொலிவோடு இருக்கும

Related posts

தழும்பை மறைய வைக்க

nathan

இனி முதுகை மறைக்க வேண்டாம்!

nathan

இந்த 5 பழங்களும் உங்கள் அழகை அதிகப்படுத்தும்!! எவையென்று தெரிஞ்சுக்கனுமா?

nathan

அழகை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்

nathan

வாழைப்பழ தோல் எப்படி உங்கள் சருமத்திற்கு நிறம் அளிக்கும்?

nathan

அழகு சிகிச்சை அபாயங்களும் ஆச்சரியங்களும்!

nathan

கழுத்தைச் சுற்றி கொஞ்சம் புளி தடவினா காணாமல் போகும் கருமையான படலம்..!!தெரிஞ்சிக்கங்க…

nathan

ரெட் வயினின் மகத்துவம்

nathan

சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிம்பிளான சமையலறைப் பொருட்கள்

nathan