onion 08 1504863520
தலைமுடி சிகிச்சை

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வெங்காயத்தை பயன்படுத்துவது எப்படி?

தலைமுடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக வெங்காயம் உள்ளது. அதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் காரணம். வெங்காயத்தில் உள்ள சல்பரானது தலை முடி உதிர்வால் ஏற்படும் வழுக்கைத் தலையில் முடி வளர உதவுகிறது.

எனவே உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்து, குறைந்தது போல் காணப்பட்டால், வெங்காயத்தை தலைமுடி குறைவாக இருக்கும் இடத்தில் பயன்படுத்தி வாருங்கள். தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சி மற்றும் வலிமையை அதிகரிக்க வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்..

* வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த சிகிச்சையை வாரம் 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

* 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை 1 லிட்டர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து முடித்த பின், இறுதியில் அந்த கலவையைக் கொண்டு தலைமுடியை அலச வேண்டும். இப்படி தலைக்கு குளிக்கும் போது செய்து வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். குறிப்பு: இந்த முறையை பின்பற்றினால் அடுத்த முறை தலைக்கு ஷாம்பு போடும் வரை தலையில் வெங்காயத்தின் வாசனை இருக்கும்.

* 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலந்து, அந்த எண்ணெயை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த முறையை வாரம் ஒருமுறை மட்டும் தான் பின்பற்ற வேண்டும்.

* இரவில் படுக்கும் போது ஒரு சிறு வெங்காயத்தை துண்டுகளாக்கி, அதனை 1/4 கப் ரம்மில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த ரம்மைக் கொண்டு தலையை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இந்த முறையையும் வாரம் ஒருமுறை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் ரம்மானது தலைமுடியை அதிகம் உலரச் செய்யும்.

* ஒரு சிறு வெங்காயத்தை அரைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 கப் பீர் சேர்த்து கலந்து, தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு தலையை அலச வேண்டும். இந்த மாஸ்க்கையும் வாரம் ஒருமுறை தான் மேற்கொள்ள வேண்டும்.onion 08 1504863520

Related posts

தலையில் அதிக பொடுகு இருக்கிறதா? அசர வைக்கும் பாட்டி வைத்தியங்கள்!!

nathan

உங்க முடி பறவைக்கூடு மாதிரி அசிங்கமா இருக்கா?

nathan

ஆண்களே முடி எல்லாம் கொட்டி போச்சா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

செம்பட்டை முடியை கருகருவென மாற்ற வேண்டுமா?அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தலை வழுக்கை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்!

nathan

கூந்தல் நன்கு வளர என்ன செய்யலாம்?

nathan

தெரிந்து கொள்ளுங்கள்.. கருப்பு முடி விரைவாக கருப்பு நிறமாக இருக்க இதை செய்ய வேண்டும்…

nathan

தலைமுடி ஆரோக்கியத்துக்கான மருத்துவ முறைகள்

nathan

தலைமுடி பிரச்சனைகளைப் போக்க வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி?hair tips in tamil

nathan