26.6 C
Chennai
Monday, Nov 25, 2024
4 16353
தலைமுடி சிகிச்சை

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு அப்புறம் உங்களுக்கு அதிகமாக முடி கொட்டுவதை எப்படி தடுக்கலாம் தெரியுமா?

ஹார்மோன் அளவுகளில் ஏற்ற இறக்கம் ஏற்படுவதன் காரணமாக, குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் அதிகமாகி, ஈஸ்ட்ரோஜனின் அளவைக் குறைத்து, முடி மிக விரைவாக ஓய்வெடுக்கத் தொடங்கும். பிரசவத்திற்குப் பிறகு, புதிய முடி வளரத் தொடங்குகிறது, இதனால் ஓய்வெடுக்கும் கட்டத்தில் இருக்கும் முடி உதிர்கிறது. இது பொதுவாக பிரசவத்திற்குப் பின் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு இடையில் நிகழ்கிறது, மேலும் பெரும்பாலான பெண்கள் சாதாரண முடி வளர்ச்சியை அடைகிறார்கள். சில பெண்கள் முகப்பரு, நிறமி, வீங்கிய கண்கள், கருவளையங்கள் மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள்.

உங்களுக்கு பிறந்த குழந்தை வந்துவிட்டால், உங்களுக்கான நேரம் மிக குறைவாகவே இருக்கும். குழந்தையை கவனித்துக்கொள்வதே உங்களுடைய அன்றாட வேலையாக இருக்கும். கர்ப்ப காலத்தில், முடி வளரும் நிலையில் இருக்கும் மற்றும் விழும் நிலை மெதுவாக இருக்கும். முடி தளர்ச்சியாகவோ அல்லது சுருண்டுபோய் உலர்ந்து போகலாம். ஹார்மோன் மாற்றங்களால் பொதுவாக விழுவது இயல்பை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். இக்கட்டுரையில், குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு ஏற்படும் முடி உதிர்வை எவ்வாறு தடுக்கலாம் என்பதை பற்றி காணலாம்.

ஷாம்பு மற்றும் கண்டிஷனர்

பிரசவத்திற்குப் பிறகு, ஹார்மோன் அளவுகள் இயல்பு நிலைக்கு வந்து, இயல்பான முடி சுழற்சி மீண்டும் தொடங்கும். அதிகப்படியான கண்டிஷனரைத் தவிர்க்கவும், கண்டிஷனருக்குப் பிறகு குளிர்ந்த நீரில் முடியை அலசவும். உதிர்ந்த முடிக்கு ஆண்டி ஃப்ரிஸ் ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்துங்கள். அதிகப்படியான உலர்த்தலைத் தவிர்க்கவும். ஆரோக்கியமான உணவு மற்றும் நிறைய பழங்கள் மற்றும் போதுமான புரதங்கள் மற்றும் உலர் பழங்களை சாப்பிட முயற்சிக்கவும்.

ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை நீங்கள் உட்க்கொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஸ்ட்ராபெரி, ஆப்பிள், ராஜ்மா, கொடிமுந்திரி போன்றவை சில நல்ல உணவுகள். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் முடியின் வேர்களை வலுப்படுத்த உதவுகின்றன.

உச்சந்தலையையும் முடியையும் சுத்தமாக வைத்திருங்கள்

உங்கள் உச்சந்தலையை மென்மையான ஷாம்புவை கொண்டு கழுவவும். ஏனெனில், இவை முடி உதிர்தல், உடைதல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் தலைமுடி வலுவிழந்து உடைந்து போகாமல் இருக்க உங்கள் தலைமுடியை கண்டிஷனிங் செய்யவும். உங்களுக்கு நேரம் குறைவாக இருந்தால், லீவ்-இன் கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்.

முடியை இழுத்து கட்டுவதை தவிர்க்கவும்

உங்கள் தலைமுடியை இறுக்கமாகக் கட்டுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், இது உங்கள் உச்சந்தலையையும் முடியையும் கஷ்டப்படுத்தும். இவ்வாறு செய்வதால் உங்கள் தலைமுடி எளிதில் உதிர்ந்து விடும் மற்றும் உடைந்து விடும்.

வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ்

குழந்தை பிறந்த பிறகு உங்கள் உடலில் பல மாற்றங்கள் நிகழும். அந்த சமயத்தில் உடல் வலுவிழந்து இருக்கும். உங்கள் கர்ப்பத்திற்குப் பிந்தைய உடலுக்கு உங்கள் வலிமையைத் திரும்பப் பெற உதவும் சில சப்ளிமெண்ட்ஸ் தேவைப்படும். முழுமையான அடர்த்தியான முடியை பராமரிக்க வைட்டமின் பி மற்றும் சி போன்ற வைட்டமின்களை தவறாமல் எடுத்துக்கொள்வதை உறுதி செய்யவும்.

இரசாயன சிகிச்சைகள்

உங்கள் தலைமுடிக்கு வண்ணம் தீட்டுதல், நேராக்குதல் மற்றும் பெர்மிங் செய்வதைத் தவிர்க்கவும். ஏனெனில், இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். மேலும், இந்த சிகிச்சைகள் அதிக பராமரிப்பு கொண்டவை, எனவே ஒரு விசேஷ சந்தர்ப்பத்திற்காக இவற்றில் ஒன்றை நீங்கள் உண்மையிலேயே செய்ய வேண்டியதில்லை என்றால், அவற்றிலிருந்து சிறிது காலம் விலகி இருப்பது நல்லது.

Related posts

உங்களுக்கு தெரியுமா நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு இந்த ஒரு பொருள் போதும்…!

nathan

தலை குளிர்மையாக இருப்பதற்கு

nathan

கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் நெல்லிக்காய் எண்ணெய்

nathan

நரை முடி வர ஆரம்பித்துவிட்டதா?

nathan

முடி கருப்பாக வீட்டிலேயே செய்யலாம் செம்பருத்தி எண்ணெய் – இயற்கை மருத்துவம்

nathan

உங்க கூந்தலுக்கு எந்த ஹேயார்ஸ்டைல் ​பொருந்தும்?

nathan

எப்படி பயன்படுத்துவது.?! பொடுகைப் போக்கும் எலுமிச்சை..!

nathan

போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளரணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கூந்தல் உடைவதைத் தடுக்கும் கற்றாழை தேங்காய் எண்ணெய்!

nathan