அழகு குறிப்புகள்

சூப்பரான பைங்கன் பர்த்தா பஞ்சாபி சப்ஜி

தேவையான பொருட்கள்

பெரிய கத்தரிக்காய் – 2

வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
சீரகம் – தாளிக்க
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
காய்ந்த வெந்தயக்கீரை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கு

செய்முறை

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கத்தரிக்காயில் நிறைய எண்ணெய் தடவி அடுப்பில் சுட்டு எடுத்து தோலுரித்து கொள்ளுங்கள்.

தோலுரித்த கத்தரிக்காயை லேசாக மசித்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

அடுத்து அதில் துருவிய இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்கவும்.

அடுத்து தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் பொடி, சேர்த்து சுருள வதக்கவும்.

அடுத்து அதில் மசித்து வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து கொள்ளுங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

கெட்டியாக வந்ததும் இறக்கி விடலாம்.

தனியாக ஒரு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கரம் மசாலா பொடி சேர்த்து சப்ஜியின் மேலே கொட்டி கொள்ளுங்கள்.

காய்ந்த வெந்தயக்கீரை நன்றாக கசக்கி அதன் மேல் தூவி சப்பாத்திக்கு சைடிஷ்ஷாக பரிமாறலாம்.

Courtesy: MalaiMalar

Related posts

பாத வெடிப்பு நீங்க

nathan

காதுவலிக்கு தீர்வு என்ன தெரியுமா?

sangika

சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகிவிடுவீர்கள் -தெரியாமல் கூட இந்த தவறை செய்திடாதீங்க

nathan

இயற்கையான க்ளென்சர் கருப்பு திட்டுகள் மறைய

nathan

சருமத்தைப் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள இதை மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை முகத்தில் ஸ்ப்ரே

nathan

முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காண

nathan

உங்களுக்கு தெரியுமா வாழை இலைக் குளியல் தரும் பலன்கள்?

nathan

பிரபுதேவாவுடன் சுற்றும் இந்த பெண் யார், வெளிவந்த ரகசியம்!

nathan

அழகு நிலையத்திற்கு அலையணுமா

nathan