தலைமுடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக வெங்காயம் உள்ளது. அதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் காரணம். ஆய்வு ஒன்றில், வெங்காயத்தில் உள்ள சல்பரானது தலை முடி உதிர்வால் ஏற்படும் வழுக்கைத் தலையில் முடி வளர உதவுவது தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்து, குறைந்தது போல் காணப்பட்டால், வெங்காயத்தை தலைமுடி குறைவாக இருக்கும் இடத்தில் பயன்படுத்தி வாருங்கள்.
இங்கு தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சி மற்றும் வலிமையை அதிகரிக்க வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து வந்தால், நிச்சயம் உங்கள் தலை முடி வளர்வதை காணலாம். இதுப்போன்று கறிவேப்பிலை, நெல்லிக்காய் கொண்டும் தலைமுடி பிரச்சனைகளைத் தவிர்த்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
வெங்காய சாறு
வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த சிகிச்சையை வாரம் 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
வெங்காய சாற்றின் மற்றொரு முறை
1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை 1 லிட்டர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து முடித்த பின், இறுதியில் அந்த கலவையைக் கொண்டு தலைமுடியை அலச வேண்டும். இப்படி தலைக்கு குளிக்கும் போது செய்து வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். குறிப்பு: இந்த முறையை பின்பற்றினால் அடுத்த முறை தலைக்கு ஷாம்பு போடும் வரை தலையில் வெங்காயத்தின் வாசனை இருக்கும்.
வெங்காய சாறு மற்றும் தேங்காய்
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலந்து, அந்த எண்ணெயை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 1-2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த முறையை வாரம் ஒருமுறை மட்டும் தான் பின்பற்ற வேண்டும்.
வெங்காயம் மற்றும் ரம்
இரவில் படுக்கும் போது ஒரு சிறு வெங்காயத்தை துண்டுகளாக்கி, அதனை 1/4 கப் ரம்மில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த ரம்மைக் கொண்டு தலையை மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இந்த முறையையும் வாரம் ஒருமுறை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் ரம்மானது தலைமுடியை அதிகம் உலரச் செய்யும்.
வெங்காயச் சாறு மற்றும் தேன்
2 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, தலையில் தடவி 15 நிமிடம் கழித்து ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி வளர்வதை நன்கு காணலாம்.
வெங்காயம் மற்றும் ஆலிவ்
ஆயில் ஒரு சிறு வெங்காயத்தை அரைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 கப் பீர் சேர்த்து கலந்து, தலையில் தடவி 1-2 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு தலையை அலச வேண்டும். இந்த மாஸ்க்கையும் வாரம் ஒருமுறை தான் மேற்கொள்ள வேண்டும்.
வெங்காயம் மற்றும் தயிர்
வெங்காயத்தை அரைத்து அதில் சிறிது தயிர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும் படி நன்கு தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச, தலைமுடி பட்டுப் போன்று மென்மையாக வளரும்.