பிக் பாஸ் நிகழ்ச்சியை விட நாளுக்கு நாள் சர்வைவர் நிகழ்ச்சியில் விறுவிறுப்பு கூடிக் கொண்டு போகின்றது.
நேற்றைய நிகழ்ச்சியில் மனிதாபிமானத்தின் உச்சத்தினை வெளிப்படுத்தியிருந்தார் தொகுப்பாளரான அர்ஜூன்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் டாஸ்க்குகள் மிகவும் பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இதனால் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஓரம் கட்டிவிட்டு சர்வைவர் இந்நிகழ்ச்சியை பலரும் சீரியஸாய் பார்க்க தொடங்கி விட்டனர்.
நிகழ்ச்சியில் காடர்கள் மற்றும் வேடர்கள் அணிகள் அணி என இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியாளர்கள் போட்டிகளை விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த வாரங்களில் எலிமினேஷன் நடந்ததை அடுத்து, இந்த வாரமும் அடுத்த எலிமினேஷன் புரோசஸ் தயாராயது.
இதனிடையே ஒரு பக்கம் ஐஸ்வர்யா இன்னொரு பக்கம் வனேசா என இருவரும் கடலுக்கு நடுவே இருக்கும் ஒரு தொங்கும் ஊஞ்சலில் அமர்ந்திருக்கின்றனர்.
அந்த ஊஞ்சலை கயிற்றை கட்டி நான்கு பேர் கொண்ட அவரவர் அணிக்குரியவர்கள் கூட்டாக சேர்ந்து பிடித்து இழுக்க வேண்டும். ஒவ்வொரு 5 நிமிடத்தில் இருந்தும் ஒரு ஒரு போட்டியாளராக கயிற்றை விட வேண்டும்.
கடைசியில் நந்தா ஒருபுறமும், உமாபதி ஒருபுறமும் கயிறுகளை பிடித்திருக்கின்றனர்.
உடனே நந்தாவுக்கு பெலன்ஸ் பண்ண முடியாமல் போக அப்படியே குனிந்து விடுகின்றார். கயிறும் பாரத்திற்கு அவரை இழுக்கின்றது. உடனே அர்ஜுன் கை.. கை என்று கூக்குரலிட்டு பார்க்கிறார்.
மறு பக்கம் உமாபதியும் கயிறை பிடித்து அவருக்கு உதவி செய்யுங்கள் என்று கத்துகின்றார். அந்த சமயம் விக்ராந்த் ஓடி போய் வேடர் அணிக்கு உதவி புரிகின்றார்.
எனினும் நிறுத்த முடிய வில்லை.. அதிரடியாக அர்ஜூன் களத்தில் இறங்கி நந்தாவை காப்பாற்றுவதற்கு அலறி ஓடி வருகிறார். இந்த காட்சிகள் சர்வைவர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகின்றன. பிறகு நந்தாவை பத்திரமாக மீட்டுள்ளனர்.
நேற்றைய நிகழ்ச்சியில் அர்ஜூனின் மனிதாபிமானம் அனைவரையும் அவருக்கு ரசிகராக்கியது என்பது மறுக்க முடியாத உண்மையே.
இதேவேளை, நேற்றைய டாஸ்க்கில் 5 ஆவது முறையாக காடர் அணி தொடர்ந்து வெற்றி பெற்றது.