36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

யாருமே ஹெல்ப் பண்ணல! கதறி அழ வைத்த சுருதி! எங்க அப்பாவுக்கும் என் அம்மாவோட அப்பாவுக்கும் ஒரே வயசு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று சுருதியின் வாழ்கை அனைவரையும் கதறி அழ வைத்து விட்டது.

இரண்டாம் தாரமாக தனது அம்மா வயதான அப்பாவுக்கு திருமணமாகி போன சோக கதையை சொல்லி ஒட்டுமொத்த போட்டியாளர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் அழ வைத்து விட்டார் சுருதி.

மாடல் அழகியான சுருதி தனது வாழ்வில் நடந்த பல கசப்பான அனுபவங்களை அழுதபடியே சொல்லி மற்றவரையும் அழ வைத்து விட்டார்.

 

இந்த கடந்து வந்த பாதை எபிசோடில் சுருதி சொன்ன கதைக்கு பலரும் ஹார்ட்டீன்களை அளித்து தங்கள் ஆதரவை அவருக்கு தெரிவித்தனர்.

எங்க அப்பாவுக்கு எங்க அம்மா இரண்டாம் தாரமாக மணமுடிக்கப் பட்டார். அப்பாவோட முதல் மனைவி இறந்துட்டதால சொந்தத்துக்குள் எங்கம்மாவை அவருக்கு கட்டி வச்சிட்டாங்க.

எங்க அம்மாவோட வாழ்க்கை மற்ற திருமணமான பெண்களின் வாழ்க்கை போல சந்தோஷமாக இல்லை என்று ஸ்ருதி தனது சோக கதையை சொல்ல ஆரம்பித்தார்.

அம்மா என தனது அம்மாவை பற்றி சொல்லும் போதே அழ ஆரம்பித்த சுருதி கடைசி வரை பல இடங்களில் கண்ணீர் சிந்தியபடியே தனது கண்ணீர் கதையை சொல்லி ஒட்டுமொத்த ரசிகர்களின் அனுதாபங்களையும் அள்ளி உள்ளார்.

சமூக வலைதளங்களில் சுருதிக்கு இப்போதே பலர் ஆர்மியை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர்.

அப்பா இறந்துட்டாங்கன்னு சொன்னதும் நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். அப்பாடா எனக்கு ஃப்ரீடம் கிடைச்சிருச்சு இனிமே என்னை யாரும் கன்ட்ரோல் பண்ண முடியாது என நினைத்தேன். அது சரியா தவறா என்று எனக்கு அப்போது தெரியாது. ஆனால், அப்போதைக்கு என் மனநிலை அப்படித்தான் இருந்தது.

அப்பா செத்து காரியம் நடந்த அந்த 16 நாளும் செம ஹாப்பியா இருந்தேன் என்றார். அம்மாவை அப்பா கல்யாணம் பண்ணும் போதே அவருக்கு 50 வயசு. அப்பா போன பிறகு வீட்டில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் போனது.

அம்மா டெய்லர் அவங்க சம்பாதிக்கிற காசுல தான் 10 ரூபாய்க்கு ரவா வாங்கி உப்மா செய்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டோம். சொந்தக்காரங்க யாருமே ஹெல்ப் பண்ணல என்றார்.

 

Related posts

சூப்பர் டிப்ஸ் உங்கள் முகம் பளிச்சிட காபி தூள்..!!!

nathan

விஜயின் அளவில்லாத பாசம்!– எதிர்பாராத தங்கை மரணம்

nathan

மதுரை ஆதீனம் மடாதிபதியாக நித்யானந்தா!

nathan

கருவளையம் போக்கும் கைமருந்து

nathan

37 வயதில் க்ளாமருக்கு குறை வைக்காத நடிகை பிரியாமணி..

nathan

உங்களுக்கு உலர்ந்த சருமமா !அப்ப தினமும் செய்யுங்க…

nathan

கணவர் கள்ள உறவில் இருந்தா… எப்படி நடந்துப்பாருனு தெரியுமா?

nathan

சருமம் சுருக்கங்களின்றி வயதானாலும் ஆரோக்கியமான சருமத்தை தக்க வைக்க உதவுகிறது விளக்கெண்ணெய்..

nathan

முகம் பளிச்சிட சில டிப்ஸ்

nathan