உலகளாவிய ரீதியில் பேஸ்புக், வட்ஸ்அப். இன்ஸ்டாகிராம் செயலிகள் செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதான இரண்டு செயலிகளும் திடீரென செயலிழந்தமையினால் மில்லியன் கணக்கான பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நெருக்கடி காரணமாக பேஸ்புக் நிறுவனத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமது சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறித்து பேஸ்புக் நிறுவனம் டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளது.
சில பயனர்களினால் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் விரைவில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயனர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக வருந்துவதாக குறிப்பிட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப பிரச்சினையை வெகு சீக்கிரத்தில் சரி செய்து இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என பேஸ்புக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்க்கு நெட்டிசன்கள் அதிர்ப்தியில் மரண அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
fixed ur pic 👍 pic.twitter.com/k4RC7Hr8pN
— Bobby Shmurner (@BobbyShmurner) October 4, 2021