நீண்ட அடர்த்தியான கூந்தல் கொண்ட பெண்கள் அழகானவர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.
நமது பெண்கள் கூந்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
ஆனால் சில சமயங்களில் பல்வேறு கூந்தல் தொடர்பான பிரச்சனைகளை அவர்கள் எதிர்க்கொள்ள வேண்டி உள்ளது.
வறண்ட கூந்தல்
பொடுகு, முடி உதிர்தல், முடி உடைதல் போன்ற பிரச்சனைகள் பலருக்கும் ஏற்படுகிறது. வறட்சியான முடி என்பதும் ஒரு முக்கியமான பிரச்சனையாகவே உள்ளது.
முடி வறண்டு காணப்படும்போது அது பல்வேறு ஆரோக்கிய சிக்கல்களுக்கு உள்ளாகிறது. எனவே முடி வறட்சியை நாம் கண்டிப்பாக சரி செய்தாக வேண்டும். இதற்கு எளிமையான சில பொருட்கள் நமக்கு உதவுகின்றன. இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கூந்தலை ஆரோக்கியமாக்கலாம்.
மேலும் இவை நமது சமையல் அறையில் எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களாகும். வறண்ட முடி போன்ற பொதுவான முடி பிரச்சனைகளுக்கு இவை தீர்வளிக்கின்றன.
உங்கள் தலையில் முடியை ஈரப்பதமாக்குவதற்கு போதுமான அளவில் எண்ணெயை உற்பத்தி செய்ய முடியாமல் போகும்போதோ அல்லது முடியில் இருக்கும் ஈரப்பதம் அதிகப்படியாக வெளியேறினாலோ அதனால் வறண்ட கூந்தல் நிலை ஏற்படுகிறது. இதற்கு சிறந்த தீர்வாக, அரிசி நீர் மற்றும் தேன் சேர்த்த கலவை இந்த பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகின்றன.