28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
download 101
சரும பராமரிப்பு

முகத்திற்கும் மட்டுமல்ல உடலுக்கும் ஸ்கரப்

சருமத்தில் எரிச்சல் ஏற்படுத்தும் பொருள்களிலிருந்து, கைக்கால் நகங்களைப் பராமரிப்பது வரை மற்றும் தலைமுடி பராமரிப்பு குறித்து ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள கொள்ள வேண்டியது அவசியம். முகத்தை அடிக்கடி ஸ்கரப் செய்யும் நாம், நமது உடலை ஸ்க்ரப் செய்வது இல்லை.

வறண்டு போன பாதங்கள், கால்களிலும், முழங்கைகளிலும் உள்ள வெடித்து உலர்ந்த சருமம், ஆகியவற்றுக்கு ஸ்க்ரப் தேவை. சிறிது தேங்காய் எண்ணெய், கல் உப்பு அல்லது சர்க்கரை மற்றும் துளசி இலைகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசை போல அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பசையை சருமத்தின் மீது நன்கு தேய்க்கவும்.

ஸ்க்ரப் செய்யவும். பின்னர் நீராவிக்குளியல் மேற்கொள்ளவும். அடிக்கடி இதனை செய்வது உறுதியான பலனைத் தரும். ஆரோக்கியமான சருமத்தினைப் பெறவும் பேணவும், முறையாக ஃபேஷியல் செய்து வருவது அவசியம். வீட்டிலேயே ஃபேஷியல் செய்து, தரமான சருமப் பராமரிப்பு நிலையத்தில் பெறத்தக்க காஸ்ட்லியான ஃபேஷியலைப் பெறலாம். இதற்கு எண்ணற்ற வீட்டுப் பராமரிப்பு முறைகள் உள்ளன. முதலில் இயற்கையின் சருமப் பராமரிப்பு கொடையான சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதனை சருமத்தின் மீது சர்க்கரையினால் வட்டமிட்டு தேய்த்து, (ஸ்க்ரப் செய்து) அதன்பின் இளஞ்சூடான வெந்நீரில் சருமத்தைக் கழுவி, மென்மையான துணியைக் கொண்டு ஒற்றியெடுக்கவும். இதனால் சருமம் பளபளக்கும் அதிசயத்தைக் காணலாம். அதே போல், ஒரு பானையில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு வெளிவரும் நீராவியில், சருமம் சில நிமிடங்கள் படும் வண்ணம் காட்டவும். (நீராவிக்குளியல்)
download 101

Related posts

கழுத்தின் இளமை ரகசியம்,

nathan

வெள்ளையாக மாற பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம்களால் ஏற்படும் பக்க விளைவுகள்

nathan

வெள்ளையான சருமத்தைப் பெற குங்குமப்பூவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

nathan

கருப்பாக காணப்படும் கைகளை வெள்ளையாக்குவதற்கான சில டிப்ஸ்…

nathan

மகாராணிகள் எல்லாம் தங்கம் போல ஜொலிக்கும் அழகுடன் இருக்க இந்த விதை தான் காரணமா?அப்ப இத படிங்க!

nathan

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டுமா?

nathan

தோல் வறண்டு போவது ஏன், அதை தவிர்ப்பது எப்படி?

nathan

அக்குள் மற்றும் கழுத்து பகுதியில் அசிங்கமாக உள்ள மருக்களை உதிர வைக்கும் சில வழிகள்!முயன்று பாருங்கள்

nathan

முகத்திற்கும் மட்டுமல்ல உடலையும் ஸ்கரப் செய்யுங்க முகத்திற்கும் மட்டுமல்ல உடலையும் ஸ்கரப் செய்யுங்க

nathan