தற்போது லாக்டவுன் என்பதால் பெண்கள் பலரும் அழகு நிலையம் செல்ல முடியவில்லையே என்று மிகவும் வருத்தப்படுவார்கள். அழகு நிலையம் சென்றால் மட்டும் தான், சரும அழகை மேம்படுத்தவும், பராமரிக்கவும் முடியும் என்பதில்லை. நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சருமத்திற்கு அழகாக பராமரிப்பு கொடுக்க முடியும்.
Oatmeal And Other Breakfast Regulars For A Glowing Skin Amidst The Quarantine
அதுவும் காலை உணவாக நாம் உட்கொள்ளும் சில உணவுப் பொருட்கள், நம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, சருமத்திற்கு தேவையான சத்துக்களை வழங்கி, சரும பிரச்சனைகளையும் போக்க வல்லது. இதற்கு காலை உணவின் போது எடுக்கும் உணவுகளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் காரணம்.
ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருப்பதால், நம் சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பதற்கு போதுமான நேரம் கிடைக்கும். இங்கு சரும பொலிவை அதிகரிக்க உதவும் சில காலை உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
கோல்ட் காபி
காலையில் காபி தயாரிக்கும் போது, அத்துடன் ஒரு வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் சிறிது மில்க் க்ரீம் சேர்த்து, பின் பிளெண்டர் பயன்படுத்தி ஒருமுறை அடித்து, மேலே வரும் நுரைப் போன்றதை சருமத்தில் தடவுங்கள். பின் சருமத்தில் நிகழும் மாயத்தைக் காணுங்கள். இது சரும வறட்சிக்கான சிறப்பான ஒரு நிவாரணி.
முட்டை
முட்டை பல சரும பிரச்சனைகளைக் போக்க வல்லது. ஏனெனில் சருமத்தில் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன. இதைக் கொண்டு அற்புதமான ஃபேஷ் பேக் தயாரித்துப் பயன்படுத்தலாம். அதுலம் முட்டையின் மஞ்சள் கருவை தனியாக பிரித்து எடுத்து ஒரு பௌலில் போட்டு நன்கு அடித்து, அதை முகத்தில் தடவுங்கள். இது பொலிவிழந்து காணப்படும் முகத்தை பொலிவாக்கும்.
வாழைப்பழ ஸ்மூத்தி
இது மிகவும் அற்புதமான பானம் மட்டுமின்றி, சூப்பரான ஃபேஸ் பேக்கும் கூட. இந்த பானத்தில் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன. பாதி வாழைப்பழம், சில ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மற்றும் அத்துடன் சிறிது தேன் சேர்த்து நன்கு அரைத்து, அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ, முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.
ஓட்ஸ்
ஓட்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக உள்ளது. இவை சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவி புரியும். அதற்கு ஒரு டீஸ்பூன் ஓட்ஸ் பொடியை தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காட்சியளிக்கும்.
கஞ்சி
கஞ்சி சருமத்திற்கு ஏற்ற மிகச்சிறப்பான ஸ்கரப் என்றே கூறலாம். 2 டீஸ்பூன் கஞ்சியுடன், சிறிது ஆலிவ் ஆயில், தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ, சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆப்பிளுடன் யோகர்ட்
யோகர்ட்டில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்தை இறுக்கமாக்கும். அதோடு ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், அது சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளும். அதற்கு சில ஆப்பிள் துண்டுகளை அரைத்து, யோகர்ட்டுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவ வேண்டும். விருப்பம் இருந்தால், சிறிது வாழைப்பழம் மற்றும் கிவி பழத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.