32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
முகப் பராமரிப்பு

பெண்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தும் முகப்பருக்களை நீக்க வேண்டுமா?

முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் வந்துவிட்டாலே தொல்லைதான். அதுவே பெண்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தும்.

 

இவை வந்தால் முகத்தின் அழகே பாழாகும். அதிலும் இந்த பருக்களானது முகத்தினை மிகவும் பொலிவிழந்தவாறு செய்யும். அதுமட்டுமின்றி, கடுமையான வலியையும் உண்டாக்கும்.

முகத்தில் கொழுப்பு அதிகமாக வெளியேறுதல், கிருமித் தொந்தரவு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, ஒரு சில மருந்துகளால் கூட பரு வரலாம்.

முகப்பருக்கள் வரும் அறிகுறி தெரிந்தாலே அதை நீக்க முயற்சி செய்வது அவசியம். அப்படி உடனடியாக முகப்பருக்களை நீக்க, சில வீட்டுக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

 

  • பூண்டை மைய அரைத்து அதன் சாறை பருக்கள் உள்ள இடத்தில் தடவுங்கள்.முகப்பருக்கள் நீங்கி, முகம் அழகு பெறும்.
  •  வெள்ளரிக்காயை அரைத்து அதை முகத்தில் தடவுங்கள். அல்லது தினமும் வெள்ளரிக்காய் ஊற வைத்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இது எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு அதிகப்படியான எண்ணெயை நீக்கி முகப்பருக்களையும் முற்றிலும் நீக்கும்.
  • முகப்பரு உள்ள இடத்தில் டூத்பேஸ்ட்டை நேரடியாக அப்ளை செய்யுங்கள். இதனால் முகப்பருவில் உள்ள கிருமிகள் மற்றும் நீரை உறிஞ்சி கூடுதலான எண்ணெய்யையும் உள்ளிழுத்துக் கொள்ளும். பருக்களும் நீங்கும். பேஸ்ட் அப்ளை செய்யும் முன் ஐஸ் கட்டிகளை பருக்களில் வைத்து தேய்த்த பிறகு அப்ளை செய்யுங்கள்.
  •  பஞ்சை தேனில் நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் பருக்கள் முற்றிலும் மறைந்துவிடும்.
  •  எலுமிச்சை சாறைப் பிழிந்து, பஞ்சில் நனைத்து பருக்களின் மேல் ஒத்தி எடுங்கள். பருக்கள் உடைந்து இருந்த இடம் தெரியாமல் போகும்.
  • இரவு தூங்கும்முன், பருக்கள் உள்ள இடத்தில் ஆப்பில் சிடர் வினிகர் தடவி காலை எழுந்து பார்த்தால் உங்களாலேயே நம்ப முடியாது. அந்த அளவிற்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • கிரீன் டீ பேகை தண்ணீரில் நனைத்து அல்லது ஃபிரிஜ் ஃப்ரீசரில் பேகை வைத்து பருக்கள் உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் பருக்கள் முற்றிலும் நீங்கும்.
  • புதினாவை அரைத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ நல்ல பலன் கிடைக்கும். இதில் இருக்கும் சாலிசிலிக் அமிலம் பருக்களை நீக்க உதவும்.
  • டீ ட்ரீ எண்ணெயில் பஞ்சை நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒத்தி எடுத்து 15 – 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவிவிடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
  • பேக்கிங் சோடாவை பருக்கள் உள்ள இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ பருக்கள் நீங்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா கண்ணுக்கு கீழ் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்

nathan

கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் உடனே மறைய

nathan

எண்ணெய் சருமமா? இந்த ஆவியை பிடிங்க

nathan

முகக்கருமை நீங்கி ஒரே வாரத்தில் முகம் பொலிவுடன் மாற சூப் டிப்ஸ்……

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியமான முடி மற்றும் சருமத்தை பெற உங்களுக்கு இந்த ஒரு பொருள் போதுமாம்…!

nathan

புத்துணர்ச்சி தரும் வெள்ளரி ஃபேஸ் பேக்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வெறும் ஐந்து நாட்களில் கருவளையம் போகணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பெண்களே 30 வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்..

nathan

பளிங்கு போன்ற முகம் வேண்டுமா..??

nathan