இன்றைய வாழ்க்கைச் சூழல் பலரை மன அழுத்தத்தில் தள்ளுகிறது. மனஅழுத்தம் பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமைகிறது. குறிப்பாகப் பொடுகுத் தொல்லை, தலைமுடி உதிர்தல், முடி கொட்டுதல் போன்ற பிரச்னைகள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டன.
தலைமுடிதான் ஒரு மனிதனின் ஆளுமைத் தீர்மானிக்கிறது. ஆனால், முடி கொட்டி அதுவே பலரை தாழ்வு மனப்பான்மையில் தள்ளி விடுகிறது. பெரியவர்களை பொறுத்த வரையில் தலையில் உள்ள 10 லட்சம் – 15 லட்சம் முடிகளில் ஒரு நாளைக்கு 80 – 100 முடிகள் வரை இழக்கிறார்கள். ஒரு சிலருக்கு வேரோடு முடி கொட்டுவது நடக்கின்றது.
இவர்கள் தங்களது முடியினை சரியான முறையில் பராமரிப்பது முக்கியமானதாகும். அந்தவகையில் வேரோடு முடி கொட்டுவதை தவிர்க்க் கூடிய ஒரு சில வழிமுறைகளை பற்றி இங்கே பார்ப்போம்.
ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், கனோலா போன்ற எந்த இயற்கை எண்ணெயும் நீங்கள் கூந்தலுக்கு பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை இலேசாக சூடாக்கவும். இளஞ்சூடாக இருக்கும் போது உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும். வட்ட வடிவில் உள்ளங்கைகளால் அழுத்தம் கொடுத்து மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு ஷவர் கேப் போட்டு ஒரு மணி நேரம் கழித்து கூந்தலை ஷாம்பு கொண்டு அலசி எடுங்கள். வாரம் ஒரு முறை ஆயில் மசாஜ் செய்து வந்தால் கூந்தல் வலுப்படும்.
சூடான க்ரீன் டீ உச்சந்தலையில் தடவி இந்த கலவையை ஒரு மணி நேரம் விட்டுவிடவும் . பிறகு கூந்தலை அலசி எடுக்கவும். க்ரீன் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் முடி உதிர்தலை தடுக்கும். இது முடியின் மயிர்க்கால்களுக்கு பலம் கொடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்க செய்யும். முடி வளர்ச்சி நிறைவாக இருக்கும்
பாதாம் அல்லது நல்லெண்ணெய் சில் துளிகள் அத்தியாவசிய எண்ணெய் உடன் சேர்த்து மென்மையாக தலைக்கு மசாஜ் கொடுங்கள். இது தலைவலி, சோர்வையும் நீக்கும். மூளை சுறுசுறுப்புடன் செயல்படும். நாள் முழுக்க புத்துணர்ச்சியாகவும் இருப்பீர்கள். .
பூண்டு சாறு, வெங்காய சாறு, இஞ்சி சாறுடன் உச்சந்தலையை தடவி விடலாம். இதை இரவு நேரத்தில் உச்சந்தலையில் தடவி விட வேண்டும். மறுநாள் காலையில் கூந்தலை அலசி எடுத்தால் போதும். வாரம் ஒரு முறை இதை செய்து வந்தால் போதும். முடி உதிர்தல் முழுமையாக நின்று விடும். அல்லது முழுமையாக குறைந்து விடும்.