தமிழகத்தில் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி துடி துடிக்க கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சி பேட்டை ஜே. ஜே நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல். இவருடைய மகனான தற்போது 37 வயது மதிக்கத்தக்க முருகனுக்கும், சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இவரது சொந்த அக்கா மகள் வனஜாவுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வனஜாவுக்கு அப்பகுதியில் உள்ள கிருஷ்ணகுமார் என்பவரின் பழக்கம் கிடைத்துள்ளது.
இவர்களின் பழக்கம் நாளைடைவி நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக இது நீடித்து வந்த நிலையில், கணவன் முருகன் இதை கண்டுபிடித்து இருவரையும் கண்டித்துள்ளார்.
இருப்பினும், அவர்கள் முருகனின் பேச்சை கேட்காமல் இருந்து வந்த நிலையில், கடந்த 6-ஆம் திகதி வனஜாவும், கிருஷ்ணகுமாரும் வீட்டின் அருகிலுள்ள மரவள்ளி தோட்டத்தில் தனிமையில் இருந்துள்ளனர்.
இதை முருகன் கையும், களவுமாக பிடித்ததால், மனைவியை கண்மூடித்தனமாக திட்டியதுடன், அடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார், முருகனை தாக்க, உடனே வனஜா கைலியால் கணவர் என்று கூட பார்க்காமல், முருகனின் கழுத்தை நெரித்து துடி துடிக்க கொலை செய்துள்ளார்.
அதன் பின் இரவில் அனைவரும் தூங்கிய பின்பு, முருகன் உடலை எடுத்து வந்து வீட்டின் சந்தில் போட்டுள்ளார்கள். காலையில் அக்கம்பக்கத்தினர் கணவர் தடுக்கி விழுந்து இறந்து விட்டார் என்று நாடகமாடி உள்ளார் .
அதன்பேரில் முருகன் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் முருகன் சாவில் சந்தேகம் உள்ளது என்று முருகன் உடம்பில் காயம் உள்ளதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, உடனடியாக அங்கு வந்த பொலிசார்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
அப்போது வனஜாவிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, நானும் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் கிருஷ்ணகுமார் கடந்த ஐந்து வருடமாக நெருக்கமாக இருந்து வந்தோம்.
இதையடுத்து, கடந்த 6-ஆம் திகதி நாங்கள் இருவரும் தனிமையில் இருப்பதை கணவர் கையும், களவுமாக பிடித்ததால், அவரை கழுத்தை நெரித்து காதலன் உதவியுடன் கொலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அதன் பின் பொலிசார் கிருஷ்ணகுமார் மற்றும் வனஜா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.