175b6
அழகு குறிப்புகள்

விஞ்ஞானிகள் சாதனை! இரத்தம் எடுக்காமல் சர்க்கரை பரிசோதனை செய்யும் புதிய கருவி!

அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு வலி இல்லாத இரத்த சர்க்கரை பரிசோதனையை உருவாக்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகள் பலர் வீட்டிலேயே தங்களுக்கான சர்க்கரை பரிசோதனை செய்துகொள்ளும் கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுவாக இந்தப் பரிசோதனையின் போது, பாதிக்கப்பட்டவரின் விரலில் பல முறை ஊசியால் குத்தி, அதில் வரும் ரத்தத்தின் மூலமே சோதனை செய்து முடிவுகளை பெறுவது இதுவரை வழக்கமாக இருக்கிறது.

 

 

இதற்கு மாற்றாக, எந்தவித காயமும், வலியும் இல்லாமல், எச்சில் மூலமாக பரிசோதனை மேற்கொள்ளும் முறையை, அவுஸ்திரேலியாவின் நியூ கேஸ்டில் (New Castle) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பட்டையை, நாக்கில் வைத்த சில நிமிடங்களில், பரிசோதனை முடிவுகள் செல்போன் செயலிக்கு வந்தடையும்.

இந்த சோதனை கருவிகளை உற்பத்தி செய்வதற்கான வசதியை நிறுவ, அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து 4.7 மில்லியன் டொலர் நிதியுதவி பெறப்பட்டுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பத்தை COVID-19 சோதனை மற்றும் ஒவ்வாமை, ஹார்மோன் மற்றும் புற்றுநோய் பரிசோதனைக் கருவியாகவும் மாற்றலாம் என்று அவுஸ்திரேலியாவின் நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் பால் தஸ்தூர் கூறுகிறார்.

 

Related posts

மகளீர் தினத்தில் டிடி சொன்ன குட்டி ஸ்டோரி! 36 வயது-டைவோர்ஸ்… வீடியோ இதோ

nathan

பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை

nathan

சுவையான ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

nathan

நகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்!

sangika

அழகான நகங்களைப் பெற

nathan

மினுமினுப்பான கழுத்துக்கு…. Skin Care Tips for a discoloured Neck

nathan

அர்ச்சனாவின் சூட்டை கிளப்பி விடும் வீடியோ…!!

nathan

மகனுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்-திக் நிமிடத்தின் திடீர் திருப்பம்

nathan

ஆண்களின் இந்த வகை ஹேர்ஸ்டைல் பெண்களுக்கு பிடிக்காதாம்

sangika