உங்கள் முகத்தின் அழகையும் நீங்கள் அதிகரிக்க விரும்பினால், பாலில் உள்ள கிரீம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம், மில்க் கிரீம் மூலம் நாம் நமது சருமத்தை ஜொலிக்கச் செய்யலாம். இதன் பயன்பாடு இயற்கையான பிரகாசத்தை அளிக்கிறது.
பால் ஏடு முகத்தை சுத்தப்படுத்தும் (Face Cleaning) ஒரு இயற்கையான வழியாகவும் பார்க்கபப்டுகின்றது. இது முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்வதோடு, தோலில் படிந்துள்ள தூசி மற்றும் மண்ணையும் அகற்றி சுத்தம் செய்கிறது. இதை முகத்தில் மட்டுமல்லாமல், முழங்கால்கள் மற்றும் முழங்கைகளிலும் பயன்படுத்தலாம்.
மில்க் கிரீம் ஒரு நல்ல மாய்ஸ்சரைசராக பயன்படுகிறது
பால் ஆடை முகம் மற்றும் சருமத்திற்கு நல்ல மாய்ஸ்சரைசராக பயன்படுகிறது. இதில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதத்தை சருமம் மிக விரைவாக உறிஞ்சிவிடுகிறது. இதன் காரணமாக முகத்தை கிரீம் கொண்டு மசாஜ் செய்வது சருமத்துக்கு பொலிவைத் தருவதோடு ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது.
இந்த முறையில் மில்க் கிரீம் பேக்கைப் பயன்படுத்தவும்
1. மில்க் கிரீமின் ஃபேஸ் பேக் முகத்தில் இயற்கையான பிரகாசத்தைக் கொண்டுவருகிறது.
2. இதை வீட்டிலேயே செய்ய, மஞ்சள், சந்தனம், கடலை மாவு, தேன் (Honey), ரோஸ் வாட்டர் ஆகியவற்றை பால் கிரீமில் கலக்கவும்.
3. பின்னர், முகம் முழுவதும் பரவும் வகையில், இந்த பேக்கை முகத்தில் தடவவும்.
4. அந்த கலவை முழுவதுமாக வறண்டு போகும் வரை முகத்தில் அப்படியே விடவும்.
5. இதற்குப் பிறகு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
6. சில நாட்களுக்கு இதைப் பயன்படுத்தினால் போதும், உங்கள் சருமத்தில் பொலிவும் பளபளப்பும் அதிகரிக்கும்.
லாக்டிக் அமிலம் பல நன்மைகளை அளிக்கின்றது
பால் (Milk) கிரீமில் லாக்டிக் அமிலம் உள்ளது என நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த அமிலம் சருமத்தை பளபளக்கச் செய்யும் தன்மை கொண்டது. லாக்டிக் அமிலத்தில் சருமத்திற்கு இதம் தரும் பல அம்சங்கள் உள்ளன. இதன் மூலம், டோனிங் நீங்கி, சருமத்தில் புதுப் பொலிவு தோன்றுகிறது.
இந்த வழியிலும் பயன்படுத்தலாம்
பால் ஏடில் கடலை மாவை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் வரை இருக்க வைக்கவும். இதன் பிறகு நீர் கொண்டு கழுவவும். இதன் மூலம் தோலில் பளபளப்பு உண்டாகிறது. இது தவிர, கிரீம் கலந்த மஞ்சளைப் பயன்படுத்துவதும் சருமத்தை மேம்படுத்துகிறது.
குறிப்பு: இந்த செய்தியில் கொடுக்கப்பட்ட தகவல்கள் பொதுவான அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை. எனவே, தோல் நிபுணரிடம் கலந்தாலோசித்த பிறகே இவற்றைப் பின்பற்றுங்கள்.