21 60d2528e78fda
Other News

சுவையான மலபார் சிக்கன் ரோஸ்ட்- செய்வது எப்படி?

சிக்கன் என்றால் பலருக்கும் அதீத பிரியம் உண்டு. அதிலும், மலபார் சிக்கன் ரோஸ்ட் மிகவும் அருமையாக இருக்கும். எப்படி செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்….

தேவையான பொருட்கள்

சிக்கன் லெக் பீஸ் – 6
வெங்காயம் – 20
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 துண்டு
தேங்காய் எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சமையல் எண்ணெய்- தேவையான அளவு

சிக்கன் ஊற வைப்பதற்கு தேவையான பொருட்கள்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சோள மாவு – 2 டீஸ்பூன்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
எலுமிச்சை – 1

 

செய்முறை

முதலில் சிக்கன் லெக் பீஸை நீரில் சுத்தமாக கழுவி, அதில் ஆங்காங்கே கத்தியால் கீறி விட வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் சிக்கன் லெக் பீஸை வைத்து, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுக்க வேண்டும்.

சிக்கன் நன்றாக சிவக்கும் படி பொரிக்க வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.

பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் வறுத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து, அதோடு மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சூடான மற்றும் சுவையான மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெடி!!!

Related posts

புகழ் குழந்தையை பார்க்க வந்த ஷிவாங்கி

nathan

மணி பிளான்ட்டை எந்த திசையை நோக்கி வளர்க்க வேண்டும்..?

nathan

கணவரை பிரிந்த பின் கர்ப்பமான டிடி! கசிந்த தகவல்

nathan

வாட்ச்மேன் முதல் ஐ.ஐ.எம் பேராசிரியர் வரை

nathan

Gigi Hadid Does Double Denim With a Sassy Twist for Rangers Game

nathan

இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்வு…

nathan

balli sastram tamil – பல்லி சாஸ்திரம்

nathan

ரூ.60 லட்சம் சம்பளம் பெறும் இந்திய மாணவியின் கதை!!

nathan

என்னை படிக்க சொல்ல நீ யாரு.. மூத்த நடிகையை திட்டிய வனிதா மகள்

nathan