25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
face wash
அழகு குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகத்திற்கு ஏன் சோப்பை அதிகம் பயன்படுத்தக் கூடாது என்று தெரியுமா?

முகத்தில் உள்ள அழுக்கு போக வேண்டுமென்று வெளியே சுற்றி வந்த பின்னர் உடனே முகத்திற்கு சோப்பு பயன்படுத்தி கழுவுவோம். ஆனால் அப்படி எப்போது பார்த்தாலும் முகத்திற்கு சோப்பை பயன்படுத்தினால், அது அழகையே கெடுத்து, சருமத்தை அதிக பாதிப்பிற்கு உள்ளாக்கும்.

முகத்திற்கு ஏன் சோப்பை பயன்படுத்தக்கூடாது? சோப்பானது சோடியம் லாரில் சல்பேட் மூலம் செய்யப்பட்டது. இது சருமத்தை பாதிக்கும் ஒரு பொருள். அதுமட்டுமின்றி, சோப்பில் இதர கெமிக்கல்களான நுரையை உண்டாக்கும் ஏஜென்ட்டுகள், நிறங்கள், பதப்படுத்தும் பொருட்கள், செயற்கை நறுமணப் பொருட்கள், காஸ்டிக் சோடா போன்றவையும் உள்ளன.

காஸ்டிக் சோடா என்பது தொழிற்சாலைகளில் பெயிண்ட் கறைகளை நீக்கப் பயன்படுத்தும் ஒன்று. இத்தகையது நிறைந்த சோப்பை அதிக அளவில் சருமத்திற்கு பயன்படுத்தினால் சருமத்தின் ஆரோக்கியமே பாழாகும்.

சரி, இப்போது முகத்திற்கு சோப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்போமா!!!

சருமம் பாதக்கப்படும்

சோப்பு சருமத்தின் வெளிப்பகுதியை அதிகம் பாதித்து, சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை முற்றிலும் வெளியேற்றி, அதனால் சருமத்தில் பல்வேறு பிரச்சனைகள் வர வழிவகுக்கும். அதிலும் சோப்பை தொடர்ந்து அதிக அளவில் பயன்படுத்தி வந்தால், பாக்டீரியாக்கள் முகத்தை தாக்க ஆரம்பித்து, அழகை பாழாக்கும்.

 

வறட்சியான சருமம்

சோப்புகளில் உள்ள காஸ்டிக் சோடா, சருமத்தில் இருக்கும் அனைத்து எண்ணெயையும் நீக்கி, வறட்சியை ஏற்படுத்தும். இதனால் சருமத்தில் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, முகத்தில் ஆங்காங்கு தோலுரிய ஆரம்பிக்கும்.

 

சருமத்தின் நோயெதிர்ப்பு சக்தி குறையும்
சருமத்தின் நோயெதிர்ப்பு சக்தி குறையும்
சோப்புக்களை அதிக அளவில் முகத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து, நோய்களை எதிர்த்துப் போராட முடியாமல், பல்வேறு நோய்க்கிருமிகளின் தொற்றுகளுக்கு உள்ளாக்கும்.

நல்ல பாக்டீரியாக்கள் அழியும்

சோப்புகள் சருமத்தில் உள்ள சில நல்ல பாக்டீரியாக்களை அழித்து, முகப்பரு, பிம்பிள் போன்றவை வருவதற்கு வழிவகுக்கும். அழகைக் கெடுக்கும் பருக்கள் வருவதற்கு நல்ல பாக்டீரியாக்களானது சருமத்தில் இல்லாததும் ஒரு காரணம்.

சருமத்தில் இருந்து வைட்டமின் டியை வெளியேற்றும்

வெயிலில் சென்று வந்த பின்னர், சூரியக்கதிர்களில் இருந்து பெறப்பட்ட வைட்டமின் டி சருமத்தினுள் திரட்டப்படும். அப்படி திரட்டப்பட்ட வைட்டமின் டி-ஆனது சோப்பு கொண்டு முகத்தை கழுவும் போது, அழிக்கப்படுகிறது. இதனால் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

சருமத்துளைகளில் அடைப்பு

இறைச்சிகள் மற்றும் காய்கறிகளின் கொழுப்புக்கள் சோப்புகளில் உள்ளன. எனவே இவற்றைப் பயன்படுத்தும் போது, அவை சருமத்துளைகளை அடைத்து, கரும்புள்ளகள், பருக்கள் போன்றவற்றினை உருவாக்கி, அழகையே பாழ்படுத்தும்.

சருமத்தின் pH அளவு பாதிக்கப்படும்

சோப்புகளில் உள்ள அல்கலைன் pH தான் பாக்டீரியாக்கள் வளர்வதற்கான சிறப்பான ஒன்று. எனவே இத்தகையது நிறைந்த சோப்புக்களை பயன்படுத்தினால், சருமத்தின் அசிடிக் pH-ற்கு தொந்தரவு ஏற்பட்டு, சருமத்தில் பாக்டீரியாக்கள் தொற்ற அனுமதித்துவிடும்.

Related posts

nathan

முக அழகை பாதிக்கும் வியாதிகள் பற்றி தெரியுமா? கட்டாயம் இத படிங்க!…

sangika

இதை செய்யுங்கள்! தினமும் இரவில் தூங்கும் முன் பேஸ்பேக் முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வர முகம் வெண்மையாகும்.

nathan

சூர்யா ஜோதிகாவின் ரீல் மகளா இது? நம்ப முடியலையே…

nathan

முகப் பரு, கரும் புள்ளிகள் குறைந்து பொலிவுடன் காண அரிசி ஃபேஸ் பெக்!…

sangika

பப்பாளி சருமத்தை பளபளப்பாக

nathan

இந்த 6 இடத்துல மச்சம் இருக்குறவங்களுக்கு பணக் கஷ்டமே வராதாம்… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

அசத்தலான சில குறிப்புகள்..!!!! உங்கள் சருமம் உடனடி பொலிவு பெற..!!

nathan

அழகுக்கு ஆரஞ்சு பழம்

nathan