27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
tyuhi
அழகு குறிப்புகள்

முகம் பளபளப்பாக மாறணுமா? இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

பள பள அழகு தரும் பப்பாளி! பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இப்பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. முகம் பளபளப்பாக மாறணுமா? இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

1. பப்பாளி பழத்தை வெட்டி கூழாக்கிக் கொள்ளுங்கள். இந்த கூழில் ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மட்டி- அரை டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். 2. இதனை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும். 3. சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும். மென்மை கொஞ்சம் கூட இருக்காது. இதனால் சருமம் அழகற்றதாக மாறிவிடும். 4. இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு. எப்படி என்கிறீர்களா? பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், வெகு žக்கிரமே முகம் மென்மையானதாக மாறி விடும. கருவளையமா? ஒரு சில பெண்களின் கண்ணுக்கு கீழ் கருவளையம் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட கருவளையம், மற்றும் கன்னத்தில் கருமை படர்தல், கன்னத்தில் கருந்திட்டு என்று கருமை தோன்றிய பகுதிகளை மாற்றி இயற்கை அழகை மெருகூட்டி வருகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்? சோற்றுக்கற்றாழை இலை ஒன்றின் ஜெல்லுடன் பப்பாளி கூழ்- ஒரு டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இதை கழுத்தில் இருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் நன்றாக தேய்த்து, இது நன்றாக காய்ந்ததும் தண்­ரில் கழுவுங்கள். வாரம் 2 தடவை இப்படி செய்து பாருங்கள். கருப்பு மாயமாகி இருப்பதை காண்பீர்கள்.
tyuhi
சிவப்பழகு வேண்டுமா? பெரும்பாலான பெண்கள் சிவப்பழகைத்தான் விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டியது இதுதான்… கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும். அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்! இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.

வெண்பிஞ்சு பாதங்கள்! பப்பாளி கூழ்-2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன், விளக்கெண்ணை-கால் டீஸ்பூன், மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை பாதங்களில் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். உங்கள் பாதங்கள் சுருக்கம் இல்லாமல் மென்மையானதாக மாறிவிடும்.

Related posts

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! சருமத்துக்கு எளிமையான ஃபேஸ்பேக்!

nathan

இந்த 4 ராசிக்காரங்க கையில பணம் அடுக்கடுக்கா சேருமாம்…தெரிஞ்சிக்கங்க…

nathan

நடிகையை ரகசியமாக துரத்தி துரத்தி காதலித்து வந்த நடிகர் விஜய்..

nathan

கை நடுக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் புடின்! நீங்களே பாருங்க.!

nathan

உங்க முடி கருகருன்னு நீளமா அடர்த்தியா வளரணுமா?

nathan

அடேங்கப்பா! யூடியூப்பில் கலக்கிய அராத்தி பூர்ணிமா ரவியா இது? நம்ப முடியலையே…

nathan

நீங்களே பாருங்க.! குழந்தை பிறக்கும் வீடியோவை பகிர்ந்த நகுலின் மனைவி….

nathan

இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகள்…..

sangika

சருமத்தில் தேவையற்ற முடி வளர்ச்சியை தடுக்கும் பவுடர்

nathan