%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D %E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D %E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
அசைவ வகைகள்

செட்டிநாட்டு இறால் வறுவல்

இறால் – 1/4 கிலோ கிராம்
வெங்காயம் – 2 பெரியது ( நறுக்கிக்கொள்ளவும் )
பூண்டு – 10 பெரிய பல்
சோம்பு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
தக்காளி – 2 பழம்
தேங்காய் – கால் மூடி ( துருவியது)
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி – ஒரு விரலளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கையளவு
வத்தல் மிளகாய் – 20 பெருசு

பூண்டையும் இஞ்சியையும் நன்கு அரைத்துக் கொள்ளவும் , வெங்காயம் நீளவாக்கில் வெட்டிக் கொளவும்.தோல்,ஓடு நீக்கிய இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். ( தூயா அளவுக்கு ரொம்ப கழுவினால் இறால் காணாமல் போய்விடும் வாய்ப்புள்ளது )
தேங்காய் துருவலையும் 15 வத்தல் மிளகாயையும் சோம்பு,சீரகத்துடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு வெங்காயம் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறத்துக்கு வந்தபின் தங்காளியை துண்டங்களாக்கி போட்டு வதக்கவும்.
இறாலையும் மஞ்சள்தூளையும் சேர்த்து பிசறி வாணலியில் போட்டு 5 நிமிடம் வதக்கவும். அப்படியே மறக்காமல் கொஞ்சமா தண்ணிவிட்டு அரைத்து வைத்துள்ள பூண்டு இஞ்சி விழுதையும் தேங்காய், வத்தல் கூட்டணியையும் சேர்த்து நீர் வற்றும் வரை கிளறவும்.
இறாலில் மசால் பிடித்தவுடன் தாளிக்கிற கரண்டியில் சிறிது எண்ணைவிட்டு 5 வத்தல் மிளகாயை வெட்டிபோட்டு கொஞ்சம் கறிவேப்பிலை தூவி தாளிக்கவும், தாளித்தபின் அதனை இறக்கி வைத்துள்ள இறால் வறுவலின் மேல் ஊற்றி சிறிது நேரம் கழித்து பறிமாறவும்.
%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D %E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D %E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D

Related posts

சிக்கன் ப்ரை / Chicken Fry

nathan

தாய்லாந்து ஃப்ரைடு ரைஸ்

nathan

கோவா ஸ்பெஷல் இறால் புலாவ்

nathan

காரைக்குடி கோழி குழம்பு செய்முறை விளக்கம்

nathan

நெத்திலி கருவாட்டு குழம்பு

nathan

இறால் மக்ரோனி : செய்முறைகளுடன்…!

nathan

சிம்பிளான… கடாய் பன்னீர்

nathan

நெத்திலி மீன் அவியல்

nathan

இரும்புச்சத்தை அதிகரிக்கும் முருங்கைக்கீரை முட்டை பொரியல்

nathan