35.5 C
Chennai
Wednesday, May 28, 2025
Nikitha cool in sudithar photos 1
சரும பராமரிப்பு

வேலைக்குப் போகும் பெண்களா நீங்கள் ,,,,,,

தற்போது வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே சமயம், அவர்கள் தங்கள் அழகை சரியாக பராமரிக்க முடியாத நிலையிலும் உள்ளார்கள். ஆகவே அத்தகைய பெண்களுக் கு ஒருசில எளிமையான அழகு குறிப்புகளை பரிந்துரைக்கிறோம்..

** கண்கள் நன்கு புத்துணர்ச்சியுடனும், கரு வளையமின்றியும் இருக்க, தினமும் காலையில் எழுந்ததும், உருளைக் கிழங்கை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க செல்ல வேண்டும்.

** சில பெண்களுக்கு முகத்தில் உள்ள முடியானது நன்கு தெரியும். இதனை மறைக்க வேண்டுமெனில், ஃபௌண்டேஷன் போடலாம். இல்லையெனில், வாரத்திற்கு ஒரு முறை எலுமிச்சையை முகத்தில் தேய்த்து வந்தால், முடி தெரியாது.

** சரும பிரச்சனைகளிலேயே முகப்பரு பிரச்சனையால் தான் பெரும்பாலானோர் அவஸ்தைப்படுகின்றனர். இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட பழங்களால் செய்யப்படும் ஃபேஸ் பேக்கை, வாரத்திற்கு ஒரு முறை போட வேண்டும்.

** சரும சுருக்கம் ஏற்பட்டால், அது முதுமைத் தோற்றத்தை வெளிப்படுத்தும். இதனை தற்காலிகமாக மறைக்க கன்சீலர் பயன்படுத்தலாம். ஆனா ல் இயற்கையாக மறைக்க வேண்டுமெனில், தயிரை முகத்திற்கு தடவி நன்கு உலர விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ச்சியாக வாராவாரம் ஒரு முறை செய்துவந்தால், நல்ல பலன் தெரியும்.

** கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அதன் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமெனில், பீர் அல்லது பீர் ஷாம்பு கொண்டு கூந்தலை அலச வேண்டும். வேண்டுமெனில், ஒயின், வோட்கா போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

* நகங்கள் அழகாக இருப்பதற்கு நெயில்பாலிஷ் போடுகிறோம். ஆனால் அந்த நெயில் பாலிஷ் சீக் கிரமே போய்விடுவதால், அது நகங்களின் அழகைக் கெடுக்கிறது. ஆகவே அது நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமெனில், பால் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, பின் நெயில் பாலிஷ் போட வேண்டும்.

** முழங்கை வறட்சியுடன் அசிங்கமாக இருந்தால், அதனை போக்க தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால், வறட்சி நீங்குவதோடு, முழங்கையும் மென்மையாக இருக்கும்.
Nikitha cool in sudithar photos 1

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மழைக்காலத்தில் எண்ணெய் பசை சருமத்தை பராமரிக்க சில டிப்ஸ்…

nathan

சருமமும் தலைமுடியும் பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்க நீங்க ‘இத செஞ்சா போதுமாம்…!

nathan

குழந்தைகளுக்கு ஏற்படும் சருமப் பிரச்சனைகள்

nathan

சருமமே சகலமும்!

nathan

கருமையான அக்குளை வெள்ளையாக்கும் பத்து இயற்கை முறைகள்

nathan

கண்களைச் சுற்றி இருக்கும் சுருக்கத்தை விரட்ட வேண்டுமா?அப்ப தினமும் செய்யுங்க…

nathan

சருமம் சுருக்கங்களின்றி வயதானாலும் ஆரோக்கியமான சருமத்தை தக்க வைக்க உதவுகிறது விளக்கெண்ணெய்..

nathan

10 நாட்களில் தேமல் முற்றாக மறைந்துவிட இத செய்யுங்கள்!…

sangika

இன்ஸ்டன்ட் ஃப்ரெஷ்னஸ்… இமீடியட் பியூட்டி! அழகு குறிப்புகள்!!

nathan