27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
img1130626032 2 1
சரும பராமரிப்பு

மூக்கை சுற்றியுள்ள கரும் புள்ளிகளை எப்படி நீக்குவது ??

மூக்கு ஒருவரின் முக அமைப்பை தீர்மானிப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றது. பலருக்கும் மூக்கில் வரும் முக்கிய பிரச்சனை மூக்கின் பக்கவாட்டிலும் சுற்றிலும் வரும் கரும்புள்ளிகள். இது அவர்களின் அழகை கெடுத்துவிடும். இந்த பிரச்சனையிலிருந்து நமது மூக்கை பாதுகாப்பது எப்படி,,,,,,

** நீண்ட நாட்களாக இருக்கும் இந்த கரும்புள்ளிகளுக்கு ஆவி பிடித்தல் சிறந்த சிகிச்சையாக இருக்கும்.

** ஆவி பிடிப்பதற்கு முன் மூக்கின் நுனிகளில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

** பின்னர் ஒரு பாத்திரத்தில் நன்றாக கொதிக்க வைத்த நீரை எடுத்து நன்றாக வேர்க்கும் வரை ஆவி பிடிக்க வேண்டும்.

** பின்னர் நல்ல வெளிச்சமான இடத்தில் உட்கார்ந்து கண்ணாடியை பார்த்துக் கொண்டு கரும்புள்ளி ரிமூவரால் இந்த ரிமூவர் ஃபேசியல் கிட்டில் இருக்கும்.

இல்லையென்றால் ஸ்டெரிலைஸ் ஸ்பூனின் முனை கொண்டு அந்த கரும்புள்ளிகளை மெதுவாக அழுத்த வேண்டும்.

** வேரோடு வெளியே வரும் கரும்புள்ளிகளை துடைத்து எடுத்துவிடுங்கள்.

** பின்னர் குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவ வேண்டும்.

** இந்த முறையை பின்பற்றி மூக்கில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை புள்ளிகளை முழுதுமாக நீக்கி விடலாம்.

** எண்ணெய் உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும், இந்த எண்ணெய் பசைகள் மூக்கில் கரும்புள்ளிகள் உருவாக வழி வகுக்கும்.
img1130626032 2 1

Related posts

அழகை கெடுப்பது போலிருக்கும் மச்சத்தை நீக்க வேண்டுமா? விளக்கெண்ணெயில் ஒரு எளிய தீர்வு

nathan

சருமத்தை பளபளப்பாக்கும் சர்க்கரை ஸ்கரப்

nathan

இரவில் படுக்கும் முன் இந்த ஃபேஸ் பேக்கை போட்டால் சீக்கிரம் வெள்ளையாகலாம்!

nathan

வீட்டிலேயே புத்துணர்ச்சி தரும் ஸ்பா வேண்டுமா? இதோ இயற்கையான மூலிகை குளியல்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பனியால் பாதங்களில் வெடிப்பு இருக்கா? அதற்கான ஸ்பெஷல் பராமரிப்புகள்!

nathan

15 நிமிடத்தில் அழகாக ஜொலிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்….

nathan

முகத்திற்கும் மட்டுமல்ல உடலுக்கும் ஸ்கரப்

nathan

சரும பொலிவை பாதுகாக்க வீட்டில் தயாரிக்கலாம் வாசனை பவுடர்

nathan

இதை முகத்தில் ‘மாஸ்க்’ போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இளமையாக மாறும்…..

sangika