34.6 C
Chennai
Saturday, Jul 27, 2024
28
கார வகைகள்

சோயா கட்லெட்

தேவையானவை: சோயா உருண்டைகள் – 20, வேகவைத்த உருளைக்கிழங்கு – 2, கேரட் துருவல் – கால் கப், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, கரம் மசாலா – தலா ஒரு டீஸ்பூன், புதினா – சிறிதளவு, பிரெட் தூள் – கால் கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: சோயா உருண்டைகளைக் கொதி நீரில் போட்டு, 10 நிமிடங்கள் மூடிவைக்கவும். பிறகு, நீரில் இரண்டு முறை அலசி பிழியவும். இதை, மிக்ஸியில் போட்டு துருவிக்கொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர மற்றப் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிய பிறகு, வட்ட வடிவமாக தட்டி, பிரெட் தூளில் புரட்டி, சூடான தவாவில் போட்டு எடுக்கவும்.

பலன்கள்: மாவுச்சத்து, புரதச்சத்து அதிகம் உள்ளது. கொழுப்பு ஓரளவு உள்ளது. காய்கறிகள் சேர்ப்பதால் நார்ச்சத்தும் பீட்டா கரோட்டினும் சேரும். சோயாவில் புரதச்சத்து நிறைந்திருப்பதால், பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கச் செய்யும்.
28

Related posts

ரைஸ் கட்லெட்

nathan

தீபாவளி ஸ்பெஷல்:கார முறுக்கு(முள்ளு முறுக்கு)

nathan

ருசியான அவல் கார பொங்கல்!….

sangika

மகிழம்பூ முறுக்கு

nathan

மீன் கட்லட்

nathan

ஸ்நாக்ஸ் ஓமம் மீன் பஜ்ஜி

nathan

உருளைக்கிழங்கு காராசேவு!

nathan

தேங்காய் முறுக்கு

nathan

சுவையான டயட் மிக்சர் செய்து பாருங்கள்….

sangika