31.9 C
Chennai
Friday, Jul 26, 2024
28 1430206684 raw mango sambar
சைவம்

மாங்காய் சாம்பார்

என்னென்ன தேவை?

மாங்காய் – 1,
துவரம் பருப்பு – 3/4 கப்,
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,
புளிச்சாறு – சிறு துண்டு,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 10,
தக்காளி – 1 (நறுக்கியது),
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

தாளிப்பதற்கு.

எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – 1 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
வரமிளகாய் – 2,
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

முதலில் மாங்காயை கழுவி, அதனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் துவரம் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்கி, நன்க மசித்துக் கொள்ள வேண்டும். பின் புளியை 1/4 கப் நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, சாம்பார் பொடி சேர்த்து, மாங்காய் துண்டுகளையும் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். மாங்காயானது நன்கு வெந்ததும், அதில் புளிச்சாற்றினை ஊற்றி, 3 நிமிடம் கொதிக்க விட வேண்டும். அதற்குள் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதனை சாம்பாரில் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவினால், மாங்காய் சாம்பார் ரெடி!!!
28 1430206684 raw mango sambar

Related posts

பேச்சுலர்களுக்கான சிம்பிளான தவா மஸ்ரூம்

nathan

பிர்னி

nathan

மஷ்ரூம் புலாவ்

nathan

சூப்பரான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி

nathan

கடாய் பனீர் – kadai paneer

nathan

பனீர் கச்சோரி

nathan

வெள்ளை குருமா

nathan

சிம்பிளான… தக்காளி சாம்பார்

nathan

தக்காளி – உருளைக்கிழங்கு கிரேவி

nathan