31.9 C
Chennai
Saturday, Jul 11, 2026
பிற செய்திகள்

விவேக்கின் மறைவு கேட்டு கண்ணீர் மல்க இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் வடிவேலு.

விவேக் உடன், ‛‛நந்தவன தேரு, விரலுக்கேத்த வீக்கம், மிடில்கிளாஸ் மாதவன், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” உள்ளிட்ட பல படங்களில் நடிகர் வடிவேலு நடித்துள்ளார். இருவரும் நல்ல நண்பர்கள். விவேக்கின் மறைவு கேட்டு கண்ணீர் மல்க இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் வடிவேலு.

அதில் அவர் கூறுகையில், ‛‛என் நண்பன் விவேக் ஹார்ட் அட்டாக்கினால் இறந்துட்டான் என்று இன்றைக்கு காலையில் செய்திகளில் பார்த்து தெரிந்து கொண்டேன். அவனும், நானும் நிறைய படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளோம். விவேக்கை பற்றி பேசும்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது. ரொம்ப நல்லவன், உதவும் எண்ணம் கொண்டவன். ஐயா அப்துல் கலாம் உடன் நெருக்கமாக இருப்பான். விழிப்புணர்வு, மரம் நடுவது என எவ்வளவோ விஷயம் பண்ணுவான். இரண்டு பேரும் உரிமையோடு என்னடா வடிவேலு, விவேக் என்று பேசிக் கொள்வோம். அவனை மாதிரி ஒளிமறைவு இல்லாமல் பேசக்கூடிய ஆளே கிடையாது.

கோடிக்கணக்கான ரசிகர்களில் அவன் எனக்கு ஒரு ரசிகன். நான் அவனுக்கு ரசிகன். அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதியுற மாதிரியே இருக்கும். என்னைவிட எதார்த்தமாக, எளிமையாகப் பேசுவான். அவனுக்கு இப்படியொரு மரணம் என்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. என்னால் முடியல, இந்த நேரத்தில் என்ன பேசுவது என்றே தெரியல. அவனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. நான் மதுரையில் என் அம்மா உடன் இருக்கிறேன். என் நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விவேக் குடும்பத்தினர் தைரியமாக இருக்க வேண்டும். அவன் எங்கும் செல்லவில்லை, உங்களுடன் தான் இருக்கிறான், மக்களோடு மக்களாக நிறைந்திருக்கிறான். அவனுடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும்”.

Related posts

ஜாக்பாட்டான வாய்ப்பு யாருக்கெல்லாம்.. அந்த மாஸ் நடிகர் படத்தில் நடிக்க துண்டு போடும் பிரபலங்கள்!

nathan

3வது குழந்தை பெற்றவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்க வேண்டும்.. நடிகை கங்கனா ரணவத் அதிரடியான கருத்து..

nathan

1980களின் முன்னணி நடிகைகளில் ஒருவராக,, இப்போ சீரியலில் சென்டிமெண்ட் அம்மா..

nathan

புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 5 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த மணிகண்டன் ரகசியமாக குடும்பம் நடத்தியது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா?

nathan

தற்போது தனி ஆளாக அசத்தலாக கெத்து காட்டும் ஆலியா மானசா!

nathan

முன்னர் கணவர் அடித்து துன்புறுத்துவதாக ராதா புகாரளித்து புகாரை வாபஸ் வாங்கிய நடிகை!

nathan

கோகுலத்தில் சீரியல் தொடரில் வசுந்தரா இன்ஜினியரிங் படித்துள்ள இவர் நடிப்பு மீதான ஆர்வத்தால் மாடலிங் மூலம் சீரியல் என்ட்ரி

nathan

முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு…

nathan

போலீஸ் நம்பரை கொடுத்த சுருதி ஹாசன்.. ரசிகர் ஒருவர் ‘மேடம், பிளீஸ் உங்களது வாட்ஸ் ஆப் நம்பரைக் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார்.

nathan